“ஒரு பக்கெட் தண்ணியில அத்தனை காலைக்கடனும்”.. சமந்தாவின் சவாலை ஏற்க நீங்க ரெடியா ரசிகாஸ்?

தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க சமந்தா ஒரு பக்கெட் சவால் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஹைதராபாத்: தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, சமந்தா அறிமுகம் செய்துள்ள ஒரு பக்கெட் சவாலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவரான இவர், தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்குப் பின்னும் முழு வீச்சில் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க சமந்தா யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

குடிநீர் பிரச்சினை:

குடிநீர் பிரச்சினை:

இதுதொடர்பாக அவர் தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், "குடிநீர் பிரச்சினையால் சென்னை மாநகரமே அல்லாடுகிறது. மக்கள் தண்ணீருக்காக வேலைக்கு செல்லாமல் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். மழை இல்லாததால், நீர் தேக்கங்கள் காய்ந்து கிடக்கின்றன.

இது தான் தீர்வு:

இது தான் தீர்வு:

நிறைய இடங்களில் இந்த நிலைமை இருக்கிறது. ஹைதராபாத்திலும் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது நமது கையில் இருக்கிறது. தண்ணீரை வீணாக்காமல் இருந்தால் தண்ணீர் பற்றாக்குறையை தடுக்கலாம்.வெறும் வார்த்தைகளால் மட்டும் இதை சொல்லவில்லை.

ஒரு பக்கெட் சவால்:

ஒரு பக்கெட் சவால்:

எனது ரசிகர்களுக்கு ஒரு சவாலை விடுக்கிறேன். அதை நானும் கடைபிடிக்கப் போகிறேன். மாநிலங்கள் மட்டுமல்ல, இந்த நாடு முழுவதுமே எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஒரு பக்கெட் சவாலை ஏற்க வேண்டும். ஒரே பக்கெட் தண்ணீரோடு காலை கடன்கள் அனைத்தையும் முடிக்க போகிறேன்.

தண்ணீர் சிக்கனம்:

தண்ணீர் சிக்கனம்:

தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறேன். எல்லோரும் இதை கடைபிடிக்க வேண்டும். ஒரு பக்கெட் தண்ணீரை எப்படி பயன்படுத்தினீர்கள்? என்பதை சமூக வலைத்தளத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'. இவ்வாறு சமந்தா கூறினார்.

ரசிகர்கள் வீடியோ:

ரசிகர்கள் வீடியோ:

முன்பு ஐஸ் பக்கெட் போன்ற தேவையில்லாத, ஆபத்தான பல சவால்களை ஊக்குவிக்கின்றனர் என திரைத்துறையினர் மீது மக்களுக்கு கோபம் இருந்து வந்தது. ஆனால், சமந்தாவின் இந்த உபயோகமான யோசனையால் அந்த நிலை மாறி இருக்கிறது. சமந்தாவின் இந்த யோசனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் ஒரு பக்கெட் தண்ணீரை மட்டும் பயன்படுத்தும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X