முன்னாள் காதலன்.. சாவித்ரி அம்மா மாதிரி கஷ்டப்பட்டிருப்பேன்.. சமந்தா ஷாக் பேச்சு!
சென்னை: தென்னிந்திய நடிகைகளில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை சமந்தா, சமீபத்தில் தனது முன்னாள் காதலன் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
சென்னை பெண்ணான நடிகை சமந்தா, டோலிவுட் நடிகர் நாக சைத்தன்யாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
நாக சைத்தன்யாவை திருமணம் செய்வதற்கு முன்னதாக நடிகை சமந்தா நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்தது அப்போது ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்துடன் டேட்டிங்
தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நடிகை சமந்தா, 2013ம் ஆண்டு நடிகர் சித்தார்த் உடன் இணைந்து ஜபர்தஸ்த் எனும் டோலிவுட் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின்னர், நடிகை சமந்தாவுக்கும், சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் டேட்டிங் செய்ததாகவும் ஊடகங்களில் வைரலாக பேசப்பட்டன.

பிரேக்கப்
பாய்ஸ், பொம்மரில்லு உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சித்தார்த்துடன் சில ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த நடிகை சமந்தா, திடீரென சித்தார்த் காதலுக்கு குட்பை சொல்லியது பரபரப்பை கிளப்பியது. அதன் பின்னர், நாக சைத்தன்யாவுடன் இணைந்து நடித்த சமந்தா, அவரை காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்துக் கொண்டார்.

முன்னாள் காதலன்
இந்நிலையில், சமீபத்தில் ஆன்லைன் மீடியா ஒன்றுக்கு நடிகை சமந்தா அளித்த பேட்டியில், தனது முதல் காதல் குறித்தும், அந்த தவறான முடிவை தான் செய்திருக்கக் கூடாது என்றும், நல்ல நேரம் தான் அதில் சிக்கிக் கொள்ளாமல், கடந்து வந்தது தனது அதிர்ஷ்டம் என்றும் பேசி மீண்டும் பழைய கதையை கிளறியுள்ளார்.

சாவித்ரி மாதிரி
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாவித்ரியின் பயோபிக் படமான நடிகையர் திலகம் படத்தில் நடித்த சமந்தா, அந்த பேட்டியில், முதல் காதலை பிரேக்கப் செய்யாமல் இருந்தால், சாவித்ரி அம்மா மாதிரி தானும் கஷ்டப்பட்டிருப்பேன் எனக் கூறி, டோலிவுட் மற்றும் கோலிவுட் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஹாரர் படம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய சமந்தா, மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய, அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாக உள்ள ஹாரர் படத்தில் லீடு ரோலில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி உள்ளார்.

ஹீரோக்களை கேட்பதில்லை
சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படத்தின் ரீமேக்கான ஜானு திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், தன்னை ராசியில்லாத நடிகை என்று சொல்வது தவறான விஷயம் என்றும், ஹீரோக்களும் தான் பல தோல்வி படங்களை கொடுக்கின்றனர். ஆனால், அவர்களை இப்படி பேசுவதில்லையே என்றும் சமீபத்தில் சமந்தா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











