Samantha On Sai Pallavi - சாய் பல்லவியை பார்த்து மிரண்டு போன சமந்தா - ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: Samantha On Sai Pallavi (சாய் பல்லவி குறித்து சமந்தா) நடிகை சாய் பல்லவியை பார்த்து சமந்தா மிரண்டு போன வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் ஜொலிப்பது அரிதிலும் அரிது. அந்த அரிதானவர்களில் ஒருவர் சாய் பல்லவி. நீலகிரியில் பிறந்ததால் என்னவோ இயற்கையான அழகோடு மிளிரும் சாய் பல்லவி கோயம்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்து, ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தவர். மருத்துவராக மாற வேண்டும் என்பதுதான் அவரது ஆசை.

நடனம் கற்றுக்கொண்ட சாய் பல்லவி: மருத்துவத்தின் மீது அவருக்கு எப்படி ஆர்வம் இருந்ததோ அதே ஆர்வம் நடனத்தின் மீதும் இருந்தது. அதன் காரணமாக தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தவருக்கு சேனல் ஒன்றில் நடந்த நடன போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த அரங்கத்தில் ஆடிய ஒவ்வொரு நடனத்தின் அசைவும் அனைவரையும் கவர்ந்தது. சாய் பல்லவியின் நடனத்தில் அவ்வளவு எனர்ஜி இருக்கும்
சினிமா எண்ட்ரி: நடனத்தில் கலக்கிய அவர், தாம் தூம் படத்தில் ஒரு சில நொடிகள் தலை காண்பித்தவருக்கு ஹீரோயின் ஆக வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. ஆனால் அவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
மனதை திருடிய மலர் டீச்சர்: முதல் படத்தில் அலட்டல் இல்லாத அழகுடன் அவரது இயல்பான முக பாவனைகளும், நடிப்பும் மலர் டீச்சரை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் ரசிக்க ஆரம்பித்தனர். பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவரா இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழும். அந்த அளவுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

முன்னணி நடிகை: பிரேமம் கொடுத்த கிரேஸை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் அவர் நடித்த பல படங்கள் கலவையான விமர்சனங்கலை பெற்றாலும் சாய் பல்லவியின் நடிப்பு மட்டும் மெருகேறிக்கொண்டே சென்றது. அப்படி அவர் நடிப்பில் வெளியான முக்கியமான படம் கார்கி. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படத்தை சாய் பல்லவியின் நடிப்பு அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. படத்தில் நடித்ததற்காக பலரும் தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.
மிரண்டு போன சமந்தா: இந்நிலையில் சாய் பல்லவி நடன போட்டியில் ஆடிய நடனத்தை பார்த்து சமந்தா மிரண்டு போன வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் சாய் பல்லவியின் நடனம் குறித்து சமந்தா பேசுகையில், "நீங்கள் டான்ஸ் ஆடும் போது உங்கள் மீது இருந்து என் கண்களை அகற்றவே முடியவில்லை. மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறீர்கள்" மிரண்டு போய் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











