வார்த்தையே இல்லை..மகிழ்ச்சியில் இருக்கிறேன்..யசோதா வெற்றி குறித்து சமந்தா உருக்கமான பதிவு!

சென்னை : யசோதா திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு நடிகை சமந்தா நன்றி கூறியுள்ளார்.

ஹரி - ஹரிஷ் இயக்கத்தில் சமந்தாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியானத் திரைப்படம் யசோதா. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியான யசோதா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

யசோதா

யசோதா

நடுத்தரக்குடும்பத்தை சேர்ந்த சமந்தா தன் தங்கையின் ஆபரேஷனுக்கு பணம் தேவைப்படுவதால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுக்க முடிவு செய்கிறார். இதையடுத்து, 3 மாதம் ஆன நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு சமந்தாவை போன்று பல பேர் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கின்றனர்.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள்

அதிரடி ஆக்ஷன் காட்சிகள்

குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் காரணமே இல்லாமல் இறந்து விடுவதால், பதறும் சமந்தா, இறப்புக்கான காரணம் என்ன என்று ஆராயும் போது பல திடுக்கிடும் தகவல்களை தெரிந்து கொள்கிறார். இறுதியில் சமந்தாவுக்கு என்ன ஆனது என்பதை ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் காட்சிகளுடன் படம் நகர்கிறது.

மகத்தான வசூல்

மகத்தான வசூல்

கடந்த வாரம் வெளியான யசோதா படத்தில் சமந்தா சண்டை காட்சிகளில் மிரட்டி உள்ளார். உடல் நிலைசரியில்லாத போதும் டூப் இல்லாமல் என் கதாபாத்திரத்தில் நான் தான் நடிப்பேன் என்று துணிச்சலுடன் நடித்ததை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். வாடகைத்தாய் என்ற பெயரில் நடக்கும் குற்றங்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய யசோதா படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

மகிழ்ச்சிக்கு வார்த்தைகளே இல்லை

மகிழ்ச்சிக்கு வார்த்தைகளே இல்லை

இந்நிலையில் நடிகை சமந்தா, யசோதா படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பான பார்வையாளர்களே, யசோதா படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் தான் எனக்கு கிடைத்த பரிசாக நான் கருதுகிறேன். திரையரங்கில் உங்களின் விசில் சத்தம் என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது. யசோதா படக்குழுவின் ஒட்டுமொத்த உழைப்புக்கும் பலன் கிடைத்துவிட்டதை நினைத்து மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன் என் மகிழ்ச்சிக்கு வார்த்தைகளே இல்லை.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

என்னை நம்பி யசோதா படத்தை கொடுத்த தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் அற்புதமான நடிகர்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி என்று சமந்தா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X