நயன்தாராவுக்கும், இயக்குநருக்கும் பிரச்சனை: அறம் 2-ல் நடிக்கும் சமந்தா?
சென்னை: அறம் 2 படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மதிவதனி ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து அசத்திய படம் அறம். இந்நிலையில் கோபி நயினார் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் என்றும் அதில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

கோபி நயினார் சமந்தாவை சந்தித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையை சொல்லியுள்ளார். அந்த கதை சமந்தாவுக்கு பிடித்துவிட்டதாம். இந்நிலையில் தான் அது அறம் 2 படம் என்று பேச்சு கிளம்பியுள்ளது. அது புதுக்கதையாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோபி நயினார் தற்போது ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோரை வைத்து படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
அறம் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், கோபி நயினாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று பேசப்பட்டது. அறம் பட ஷூட்டிங்கின்போது கோபி நயினார் நயன்தாராவின் நடிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்று பல டேக் போகச் சொன்னாராம். இது நயன்தாராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். டேக் விஷயத்தால் தான் அவர்களுக்கு இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கோபி நயினார் சமந்தாவை அணுகி கதை சொல்லியுள்ளார். அது அறம் 2 படமா அல்லது புதுப்படமா என்பதை கோபி நயினார் தான் தெளிவுபடுத்த வேண்டும். நயன்தாரா விஜய்யின் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்திலும் உள்ளார் நயன்தாரா.

நயன்தாராவுக்கு இயக்குநர்களுடன் மனஸ்தாபம் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் அதை அவர் மனதில் வைத்துக் கொள்வது இல்லை. சொல்லப் போனால் ஏ.ஆர். முருகதாஸின் கஜினி படத்தில் நடித்தது தான் தன் கெரியரில் எடுத்த மோசமான முடிவு என்று பேட்டி அளித்தார் நயன்தாரா. அதை எல்லாம் மறந்துவிட்டு தற்போது முருகதாஸின் தர்பார் படத்தில் நடித்துள்ளார்.
சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா. இதை போய் பெருசா பேசிக்கிட்டு.


Click it and Unblock the Notifications











