மலையாளத்தில் அறிமுகமாகும் சமந்தா..அந்த டாப் நடிகர் தான் ஹீரோ!
சென்னை : கிங் ஆஃப் கோதா படத்தின் மூலம் மலையாளத்தில் சமந்தா தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தமிழில் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல்'படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தெலுங்கில் தற்போது சாகுந்தலம், யசோதா'மற்றும் குஷி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் யசோதா திரைப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வருகிற 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா தற்போது மலையாளத் திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஏற்கனவே துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் சமந்தா நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அந்த வகையில் 'கிங் ஆப் கோத' படத்தில் சமந்தா துல்கருடன் இணைந்து நடிக்கும் முழு நீளப்படமாகவும், மலையாளத்தில் அவர் அறிமுகமாகும் முதல் படமாகவும் இத்திரைப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிங் ஆப் கோத
இத்திரைப்படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குநர் அபிலாஷ் ஜோஷி, இந்த 'கிங் ஆப் கோத' கதை குறித்து யோசித்த போது, துல்கர் சல்மான் தான் என் முதல் தேர்வாக இருந்தார். இத்திரைப்படம் காதல் அம்சத்தைக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகும். கோத்தா என்ற ஊரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டதாக தகவல்கள் கூறினார்.

விரைவில் படப்பிடிப்பு
கிங் ஆஃப் கோதா என்ற கேங்க்ஸ்டர் திரைப்படம் இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் தொடங்கப்படும் என படத்தின் இயக்குநர் அபிலாஷ் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருவதாகவும் அனைத்து பணிகளும் முடிவடைந்தவுடன், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் இயக்குநர் கூறினார்.

சீதாராமம்
இயக்குநர் அனுராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சீதாராமம். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கின்றார். ஸ்வப்னா சினிமா தயாரித்திருக்கின்ற இந்த படத்தை வை ஜெயந்தி மூவிஸ் வெளியிடுகின்றது. விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கின்ற இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











