கார்த்திக்கு ஜோடியாகும் சமந்தா... இயக்குனர் இவர்தான்.. லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை: தமிழை விடவும் தெலுங்கில் அதிக படங்களில் கைவசம் நடித்து ஒரு கலக்கு கலக்கி கொண்டுள்ளார் நடிகை சமந்தா
பாலிவுட்டையும் விட்டுவைக்காத இவர் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பாலிவுட்டிலும் மிகப் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்
தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா இப்போது கார்த்திக்கு ஜோடியாக இளம் இயக்குனரின் படத்தில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆக்ஷனிலும் மாஸ்
நடிகை சமந்தா இப்போது இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக மாறியுள்ளார் தமிழை விடவும் இவருக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் குவிந்து வருவதால் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வித்தியாசமான அதே சமயம் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் இலங்கை தமிழ் போராளியாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். நடிப்பில் மட்டுமல்லாமல் ஆக்ஷனிலும் மாஸ் காட்டிய சமந்தாவுக்கு இப்போது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது

முக்கோண காதல்
நானும் ரவுடி தான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் சமந்தாவும் கதாநாயகியாக நடித்து வருகிறார். முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஊ சொல்றியா மாமா
முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் அதே சமயம் n படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் சமந்தா. சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி வசூல் சாதனை புரிந்த புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் ஒட்டுமொத்த திரையுலகையே ஆட்டம் காண வருகிறது. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியிலும் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆடி அனைவரையும் திகைக்க வைத்த சமந்தாவுக்கு தென் இந்தியாவை தொடர்ந்து பாலிவுட்டிலும் அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே உள்ளது.
Recommended Video

கார்த்திக்கு ஜோடியாக
சகுந்தலம்,காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சமந்தா தமிழில் சமீபகாலமாக மிகக்குறைந்த படங்களிலேயே நடித்து வருவது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. இந்த நிலையில் இப்பொழுது கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேச்சிலர் படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சதீஷ் செல்வகுமார் அடுத்ததாக கார்த்தியுடன் இணைய உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











