மீண்டும் இணைந்து நடிக்கும் நட்சத்திர ஜோடி!
சென்னை: தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.
இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த இவர் முதல்முறையாக பாலிவுட்டில் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகிறார்.
இந்தியாவில் பிரபலமான நட்சத்திர ஜோடியாக இருக்கும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஏற்கனவே சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் நிலையில் இப்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஆட்டோ நகர் சூர்யா
விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் "ஏ மாய சேசாவே"வில் ஜோடியாக நடித்த சமந்தா, நாக சைதன்யா அதன் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடி ஆகினர். குறிப்பாக தென்னிந்தியாவில் அனைவருக்கும் பிடித்த நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்கள் ஆட்டோ நகர் சூர்யா, மஜூலி, மனம் என பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

வித்தியாசமான ரோலில்
தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் சகுந்தலம் திரைப்படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார்.

சர்ச்சைகளையும் கிளம்பி
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டும் இதுவரை நடித்துக்கொண்டிருந்த சமந்தா இப்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்க பலராலும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் ட்ரைய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது கூடவே சில சர்ச்சைகளையும் கிளம்பி உள்ளது.

இணைந்து நடிக்கின்றனர்
கல்யாண கிருஷ்ணன் இயக்கும் "பங்கர்ராஜு" என்ற திரைப்படத்தில் தான் நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இதில் நாகார்ஜுனா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரே ஒரு குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட நடிகை பயல் ராஜ்புட் இருப்பதாகவும் கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications











