Samantha - கடைசில நிலைமை இப்படி ஆகிப்போச்சே.. பிரபல ஹீரோவிடம் 25 கோடி ரூபாய் கடன் வாங்கிய சமந்தா?
ஹைதராபாத்: Samantha (சமந்தா) நடிகை சமந்தா தெலுங்கில் பிரபல ஹீரோ ஒருவரிடம் 25 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடிய சமந்தாவுக்கு மேற்கொண்டு ரசிகர் கூட்டம் பெருகியது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டாகியிருந்தார்.

மையோசிடிஸ் நோய்: இந்தச் சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. அதற்கு தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் ஒருவழியாக மீண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அவரின் கரியரில் அது மோசமான தோல்வி படம் என்ற பெயரை பெற்றது. தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருக்கிறார்.
குஷி ரிலீஸ்: சாகுந்தலம் தோல்வியை குஷி படத்தில் ஈடுகட்டலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சமந்தா. படத்திலிருந்து அண்மையில் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி குஷி படம் ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோயின் தாக்கம் முழுதாக விலகவில்லை என தெரிகிறது.
ஒதுங்கிய சமந்தா: இந்நிலையில் சினிமாவிலிருந்து சில காலம் ஓய்வு எடுப்பதாக அறிவித்து அவர் வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையை மீண்டும் தயாரிப்பாளர்களிடமே கொடுத்துவிட்டார். நோயால்தான் சினிமாவிலிருந்து அவர் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் சமீபத்தில் இந்தோனேஷியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு தனது தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
கடனில் சிக்கியிருக்கும் சமந்தா: நிலைமை இப்படி இருக்க தெலுங்கு திரையுலகில் பிரபல ஹீரோ ஒருவரிடம் சமந்தா 25 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தனது உடல்நல சிகிச்சைக்காக அவர் இந்தக் கடனை வாங்கியிருக்கலாம் எனவும் தெலுங்கு மீடியாக்கள் கூறுகின்றன. ஆனால் அந்த ஹீரோ யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் கடன் வாங்கும் அளவுக்கு சமந்தாவின் நிலைமை ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்த சிக்கலான நிலையிலிருந்து அவர் விரைவில் மீண்டு பழைய சம்முவாக வரவேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
சிட்டாடல்: இதற்கிடையே ஹாலிவுட்டில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் வெப் சீரிஸ் இந்தியாவிலும் உருவாகிறது. அதனை ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ்&டிகே இயக்குகின்றனர். இதில் ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் இந்திய வெர்ஷனில் சமந்தா நடிக்கிறார். வருண் தவான் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











