சமந்தா கையில கட்டியிருக்க அந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா? விளம்பர தூதுவராகவே மாறிட்டாரே!
சென்னை: டாமி ஹில்ஃபிகர் எனும் பிரபல கைக்கடிகார கம்பெனியின் புது மாடல் லேடீஸ் வாட்ச்களை நடிகை சமந்தா விளம்பரப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில், அதற்கான விளம்பர போட்டோஷூட் மும்பையில் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக பரவி வருகின்றன.
சாகுந்தலம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் சமந்தா பாலிவுட்டில் சிட்டாடல் எனும் வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.

சாகுந்தலம் வெற்றி பெறுமா? நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான உமன் சென்ட்ரிக் படமான யசோதா மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. 50 கோடிக்கும் மேல் அந்த படம் வசூல் வேட்டையை நடத்தியது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14ம் தேதி இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது. புராண படமாக உருவாகி உள்ள சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக தீவிரமாக உழைத்து வருகிறார் சமந்தா.

மும்பை, ஹைதராபாத் என பல இடங்களில் அந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமந்தாவின் அசுரத்தனமான நடிப்புக்காகவே அந்த படம் ஓடும் என்கின்றனர்.
சம்பளத்தை உயர்த்திய சமந்தா: 4 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சமந்தா சமீப காலமாக ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட இளம் நடிகைகளே 4 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில், தனது சம்பளத்தை அதிரடியாக 6 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து பாலிவுட் படங்கள் பக்கம் கண் வைத்திருக்கும் நிலையில், டோலிவுட்டிலும் பல தயாரிப்பாளர்களும் நடிகர்களும் சமந்தாவின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பதாக கூறுகின்றனர்.

வாட்ச் விளம்பரம்: மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நடிகை சமந்தா தொடர்ந்து தனது முயற்சியால் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார். சமீபத்தில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்த ஆரம்பித்த சமந்தா மீண்டும் விளம்பரங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
பிரபல வாட்ச் நிறுவனமான டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger) நிறுவனம் இந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்த உள்ள லேடீஸ் வாட்ச்சுக்கான விளம்பர தூதராக சமந்தா மாறி உள்ளார். சமீபத்தில் மும்பையில் அந்த வாட்ச்சை கையில் அணிந்து கொண்டு சமந்தா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. விரைவில் பல இடங்களில் பேனர்களாக அந்த புகைப்படங்கள் நிறுவப்பட உள்ளன.
விலை எவ்வளவு? நடிகை சமந்தா அணிந்துள்ள டாமி ஹில்ஃபிகரின் புதிய லேடீஸ் வாட்ச்சின் விலை ரூ. 10,999 என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 7,999ல் இருந்தே கடைகளில் இந்த வாட்ச் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதாக கூறுகின்றனர்.
சாகுந்தலம் படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா இணைந்து நடித்த குஷி திரைப்படமும் இந்த ஆண்டே திரைக்கு வர உள்ளது. லியோ படத்தை முடித்து விட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திலும் சமந்தா தான் ஹீரோயின் என்கின்றனர்.
மீண்டும் பழையபடியே தனது இலக்கை நோக்கி எத்தனை தடைகள் வந்தாலும் அவை அத்தனையையும் தகர்த்து எறிந்து விட்டு முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











