Samantha: “சமந்தாவிடம் அதை மட்டுமே எதிர்பார்க்கிறேன்..” மேடையில் உண்மையை சொன்ன விஜய் தேவரகொண்டா!

ஹைதராபாத்: சமந்தா, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி திரைப்படம் செப்டம்பரில் வெளியாகிறது.

கடந்த வாரம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்திருந்தது.

 Samantha: Vijay Devarakonda expects laughter from Actress Samantha

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குஷி படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் பங்கேற்றனர்.

அப்போது சமந்தா குறித்து விஜய் தேவரகொண்டா மனம் திறந்து பேசியது வைரலாகி வருகிறது.

சமந்தாவிடம் அதை மட்டுமே எதிர்பார்க்கிறேன்: விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள திரைப்படம் குஷி. சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான யசோதா, சாகுந்தலம் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இதனால், குஷி படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார் சமந்தா. சமீபத்தில் பாலி தீவுக்கு தோழியுடன் டூர் சென்றிருந்த சமந்தா, தற்போது குஷி படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவருடன் விஜய் தேவரகொண்டாவும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது இருவரும் மேடையில் ஜோடியாக டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அதுமட்டும் இல்லாமல் சமந்தாவை அலேக்காக தூக்கி அங்கிருந்தவர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய விஜய் தேவரகொண்டா, குஷி படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். முக்கியமாக சமந்தாவுடன் நடித்தது குறித்து ரொம்பவே ஹேப்பியாக பேசிய விஜய் தேவரகொண்டா, அவரிடம் தான் எதிர்பார்ப்பதையும் மனம் திறந்து வெளிப்படையாகக் கூறினார். நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா, சில மாதங்களாக மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்பட்டார்.

இதனால், சில மாதங்களுக்கு நடிப்பில் இருந்து ஓய்வுபெறும் முடிவிலும் இருக்கிறார் சமந்தா. விஜய் தேவரகொண்டா இதனையெல்லாம் மனதில் வைத்து பேசினாரா என்னவோ..? 'சமந்தாவின் முகத்தில் சிரிப்பை எதிர்பார்க்கிறேன்' என ஓபனாக கூறினார். மேலும், "குஷி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் சமந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் நிலைமையை புரிந்துகொண்டு சில நாட்கள் ஓய்வெடுக்க சொன்னோம்" எனக் கூறினார்.

"செப்டம்பர் 1ம் தேதி குஷி திரைப்படம் வெளியாகும் போது சமந்தாவின் முகத்தில் புன்னகையை பார்க்க விரும்புகிறேன்" எனவும் விஜய் தேவரகொண்டா பேசியது வைரலாகி வருகிறது. முன்னதாக குஷி படப்பிடிப்பின் போது விஜய் தேவரகொண்டா, சமந்தா இடையே காதல் மலர்ந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க காதல் பின்னணியில் ரொமண்டிக் ஜானர் படமாக உருவாகியுள்ள குஷி, சமந்தாவுக்கு கம்பேக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X