Citadel Samantha - நிர்வாண காட்சியில் நடிக்கிறாரா சமந்தா?.. வெளியான பரபரப்பு தகவல்

சென்னை: Citadel Samantha (சிட்டாடல் சமந்தா) நடிகை சமந்தா வெப் சீரிஸ் ஒன்றில் நிர்வாண காட்சியில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு இருவருமே தங்களது திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தனர். ஆனால் திடீரென சமந்தாவுக்கு மையோசிடிஸ் எனும் தோல் வியாதி வந்தது. இதனால் ரசிகர்கள் அதிரச்சியடைந்தனர். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் ஒருவழியாக நோயிலிருந்து மீண்டார்.

Samantha Will Act Nude Scene in Citagel Web Series

சாகுந்தலம்: நோயிலிருந்து மீண்ட பிறகு அவர் நடிப்பில் உருவான சாகுந்தலம் படம் சமீபத்தில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. குறிப்பாக அந்த படமானது இதுவரை வசூலில் 10 கோடியைக்கூட நெருங்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்து படு திராபையாக இருப்பதாகவும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சனத்தை வைத்தனர். சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக குஷி என்ற படம் வெளியாகவிருக்கிறது.

வெப் சீரிஸில் சமந்தா: திரைப்படங்களில் மட்டுமின்றி வெப் சீரிஸில் நடிப்பதிலும் சமந்தா கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் ராஜ் & டிகே இயக்கத்தில் அவர் நடித்த தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். அந்த வெப் சீரிஸ் வரவேற்பை பெற்றாலும் ஈழத்து போராளிகளை தவறாக சித்தரித்துவிட்டதாகவும், அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கக்கூடாது எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

புதிய வெப் சீரிஸ்: சமந்தா அடுத்ததாக சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார். இது ஆங்கிலத்தில் உருவான வெப் சீரிஸ் ஆகும். இந்த வெப் தொடரானது ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. இதில் வருண் தவான், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கின்றனர். ஃபேமிலி மேன், ஃபர்ஸி ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கி கவனம் ஈர்த்த ராஜ்&டிகே இந்த வெப் சீரிஸை இயக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha Will Act Nude Scene in Citagel Web Series

நிர்வாண காட்சியில் சமந்தா: இந்நிலையில் சிட்டாடல் வெப் சீரிஸில் சமந்தா நிர்வாண காட்சியில் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் உருவான சிட்டாடல் வெப் சீரிஸில் ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார் அவர். அதுகுறித்த காட்சிகள் ட்ரெய்லரிலும் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து ஹிந்தியில் உருவாகும் சிட்டாடல் வெப் சீரிஸில் ப்ரியங்கா சோப்ரா கதாபாத்திரத்தில்தான் சமந்தாவும் நடிக்கிறார். எனவே ஹிந்தியில் சமந்தா நிர்வாண காட்சியில் நடிக்கவிருக்கிறார் என தறபோது தகவ்லகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பேமிலி மேன் வெப் சீரிஸில் சமந்தா படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். அப்படி இருக்கும்பட்சத்தில் இதில் நடிப்பதற்கும் அவர் தயக்கம் காட்டமாட்டார் என சிலர் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X