அது போன வாரம்.. ம்ஹூம்.. பிக் பாஸ் வீட்டுக்கு நடிகை சமந்தா இனி வரமாட்டாராம்.. இதுதான் காரணமாமே!
ஐதராபாத்: பிரபல நடிகை சமந்தா, பிக் பாஸ் வீட்டுக்கு இனி வரமாட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆம் சீசன் ஏகப்பட்ட வரவேற்புடன் சென்று கொண்டிருக்கிறது, விஜய் டிவியில்.
அர்ச்சனா, சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரின் ரணகள என்டர்டெயின்மென்டில் அமர்க்களாக நகர்கிறது நிகழ்ச்சி.

பரபரப்பு பஞ்சாயத்து
கூடவே, இவர்களுக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளும் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. நிகழ்ச்சியை நடத்தும் சேனல், ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை வைத்து அழகான புரமோவை வெளியிட்டு வருகிறது. அது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெறிக்கவிடும் தெலுங்கு
தமிழைப் போலவே தெலுங்கு பிக் பாஸ் 4 சீசனும் தெறிக்கவிடுகிறது. நடிகர் நாகார்ஜுனா, இதை தொகுத்து வழங்குகிறார். சிலர் வெளியேறிய நிலையில், சிலர் புதிதாக இந்த வீட்டுக்குள் வந்துள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்.

பங்கேற்க மாட்டார்
இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக, நாகார்ஜுனா தாய்லாந்து செல்ல இருப்பதாகவும் இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்கள் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவர் தாய்லாந்துக்கு பதிலாக, மணாலி சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தொகுத்து வழங்குவார்
அவருக்குப் பதிலாக, நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. பிக் பாஸ் 3 சீசனின் போதும் நாகார்ஜுனா வெளிநாடு சென்றதால், நடிகை ரம்யா கிருஷ்ணான், பிக் பாஸ் நிகழ்ச்சியை சில வாரங்கள் தொகுத்து வழங்கினார். பின்னர் நடிகை ரோஜா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

காமெடி, சென்டிமென்ட்
இந்நிலையில் நாகார்ஜுனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான புரமோ வீடியோவையும் ட்விட்டரில் வெளியிட்டது. பின்னர் அவர் கடந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை அமர்க்களமாக நடத்தினார். டான்ஸ், காமெடி, சென்டிமென்ட் என அந்த நிகழ்ச்சி இருந்தது.

மேஜிக் அழகு
நடிகை சமந்தா கலந்துகொண்ட நிகழ்ச்சி, தெலுங்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பலர், தனது மேஜிக் அழகால் நடிகை சமந்தா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதாக சமூக வலைதளங்களில் பாராட்டி இருந்தனர். சிலர், அவர் நடத்தியதை விமர்சனமும் செய்திருந்தனர். நாகார்ஜுனா மாதிரி வருமா என்று கம்பேரும் பண்ணியிருந்தனர்.

பங்கேற்க நேரமில்லை
இந்நிலையில் இந்த வாரம் நடிகை சமந்தா நிகழ்ச்சியை நடத்தமாட்டார் என்று கூறப்படுகிறது. மணாலிக்கு சென்றுள்ள நடிகர் நாகார்ஜுனா திரும்பி வந்துவிடுவார் என்று தெரிகிறது. நடிகை சமந்தாவுக்கு விளம்பர படங்களின் ஷூட்டிங் அதிகமாக இருப்பதாகவும் அந்த பிசியில் இருப்பதால், பிக் பாஸ் நிக்ழ்ச்சியில் அவர் மேலும் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











