Don't Miss!
- News
வன்னியர் மக்களை இழிபடுத்தியதாக புகார்..! 'ஜெய்பீம்’ இயக்குநர், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு..!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நயன்தாரா, விக்னேஷ் சிவனை வாழ்த்திய சமந்தா... எதுக்குன்னு தெரியுமா ?
சென்னை : தென்னிந்திய சினிமாவின் அழகு தேவதைகளாகவும், டாப் ஹீரோயின்களாகவும் வலம் வருபவர்கள் நயன்தாராவும், சமந்தாவும். இவர்கள் நல்ல தோழிகளாக இருந்த போதிலும் தொழில் ரீதியாக செம போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர். முதல்முறையாக இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா படத்தில் கமீட் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. கவினுக்கு கிடைத்த கலக்கல் ஜோடி!

ஆஸ்காருக்கு தேர்வான கூழாங்கல்
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த கூழாங்கல் படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதிற்காக அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமான சினிமா பிரபலங்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்தள்ளனர். இந்நிலையில் சமந்தாவும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய வாழ்த்து
கூழாங்கல் படத்தின் போஸ்டரை பதிவிட்ட சமந்தா அத்துடன், நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் மிகப் பெரிய வாழ்த்துக்கள். இது மிகவும் சிறப்பான செய்தி. ஒட்டுமொத்த டீமுக்கும் என் வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கூடுதல் பவர் அளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பு
கூழாங்கல் படத்தை அறிமுக இயக்குனரான வினோத்ராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து, ரெளடி பிக்சர்ஸ் பேனரில் தயாரித்திருந்தனர்.

14 படங்களின் பட்டியல்
இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு, பல விருதுகளை வென்றுள்ளது. பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. தற்போது இந்திய திரைப்பட கழகம் சார்பில் 14 படங்கள் ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டன. இந்த பட்டியலில் யோகிபாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா படமும் இடம்பெற்றிருந்தது.

மார்ச் மாதம் ஆஸ்கார் விழா
இந்நிலையில் இந்திய ஆஸ்கார் பரிந்துரை குழுவால் கூழாங்கல் படம் தேர்வு செய்யப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஆஸ்கார் வழங்கும் விழாவில் விருது பெறும் படங்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.