நாக சைதன்யாவுடன் விவாகரத்து.. அசிங்கப்படுத்திய அமைச்சர்.. காளிதேவியிடம் முறையிட்ட சமந்தா
சென்னை: நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்றுவிட்டார்கள். நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமந்தா பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழலில் தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா குறித்து அவதூறாக பேசினார். அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சமந்தாவும் காட்டமான பதிலடி கொடுத்திருந்தார்.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது உடன் நடித்த நாக சைதன்யாவை காதலிக்க ஆரம்பித்தார். அவர்களது காதலுக்கு முதலில் சைதன்யாவின் வீட்டில் ஒப்புதல் கிடைக்காததால் சில காலம் திருமணத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டார்கள். கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் ஜோராக நடந்தது.

விவாகரத்து: திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். அவருக்கு நாக சைதன்யாவும் முழு சப்போர்ட் செய்ததாக தெரிகிறது. ஆனால் சமந்தாவின் நடிப்பு பயணத்தை நாகார்ஜுனா குடும்பம் விரும்பாததால் சில பிரச்னைகள் ஆரம்பத்தில் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சில வருடங்களுக்கு முன்பு தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சி கிளப்பினார்கள்.
அடுத்தக்கட்ட பயணம்: இதனையடுத்து மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சிம்பிளாக ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இப்படி சைதன்யாவும், சமந்தாவும் தத்தமது வழிகளில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா அவதூறாக பேசினார்.
என்ன பேசினார்: அதாவது, 'கேடிஆருக்கு சமந்தா என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் மீது ஆசைப்பட்டார். அதற்கு நாகார்ஜுனாவும் ஒத்துக்கொண்டார். அவர்கள் இருவரது விவாகரத்துக்கு இதுதான் காரணம். கேடிஆரால் பல சினிமா நடிகைகள் விரைவில் திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார்கள்' என்று சொன்னார். அவரது இந்தப் பேச்சு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமந்தாவும் காட்டமான பதிலடியை கொடுத்தார். அவர் மட்டுமின்றி ஜூனியர் என்.டி.ஆர், நாகார்ஜுனா, அமலா என ஏராளமானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
காளிதேவியிடம் சமந்தா: இந்நிலையில் ஈஷா யோகா மயத்தில் இருக்கும் காளிதேவியை சமந்தா வழிபட்டார். நவராத்திரியை முன்னிட்டு இந்த வழிபாடை நடத்திய அவர் அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, 'உங்கள் வார்த்தைக்கு நன்றி தேவி' என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக அமைச்சருக்கு சமந்தா கொடுத்த பதிலடியில், "பலவிதமான இடர்களிலிருந்து வெளியேறி வேலை செய்யவும், பெண்ணை ஒரு பொருளாக பார்க்கும் துறையில் சர்வைவ் செய்வதற்கும், காதலில் விழுந்து பிறகு அதிலிருந்து மீண்டு வரவும், விழும்போது எழுந்து சண்டை போடுவதற்கும் நம்பிக்கையும், தைரியமும் வேண்டும்.
நம்புகிறேன்: ஒரு அமைச்சராக இருக்கும் உங்களின் வார்த்தை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தனிநபரின் தனியுரிமையை மதித்து பொறுப்பு மற்றும் மரியாதையுடன் இருக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன். எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றி பேசுவதை தவிர்க்குமாறு ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











