சமந்தாவின் யசோதா அடுத்த கட்ட படப்பிடிப்பு.. படக்குழு கொடுத்து அப்டேட்!

சென்னை : தென்னிந்தியாவை ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் நடிகை சமந்தா இப்பொழுது பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ்- க்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா இப்பொழுது யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார் இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தி ஃபேமிலி மேன்

தி ஃபேமிலி மேன்

ஹீரோக்களுடன் டூயட் பாடி வந்த நடிகை சமந்தா இப்போதெல்லாம் வேறு லெவலில் கதைகளை தேர்ந்தெடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சென்ற ஆண்டு ஓடிடியில் வெளியானது தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் பலரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சமந்தாவுக்கு இந்திய அளவில் மிகப் பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது. இந்த நிலையில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் சமந்தாவை தேடி வருகின்றன

ஒரு பாடலுக்கு குத்தாட்டம்

ஒரு பாடலுக்கு குத்தாட்டம்

முன்னணி கதாநாயகியாக வந்து கொண்டிருக்கும் போதே ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டது ஒட்டுமொத்த இந்தியாவையே ஒரு குலுக்கு குலுக்கியது. அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியான புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு செம குத்து டான்ஸ் போட்டு அனைவரையும் மயக்கிய சமந்தா இப்போது ட்ரெண்டிங் நாயகியாக மாறியுள்ளார்.

யசோதா

யசோதா

மேலும் இப்பொழுது ஹாலிவுட்டிலும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹரி மற்றும் ஹனீஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் திரைப்படமாக யசோதா என்ற படம் உருவாகி வருகிறது. சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

Recommended Video

Pushpa Success Meet மேடையில் நடனமாடிய Senthil Rajeswari, DSP, Sunil Kumar
இரண்டாவது கட்ட படப்பிடிப்பு

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு

இந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது மேலும் இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், மலையாள நடிகர் உன்னி முகுந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் மணிஷர்மா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிவரும் யசோதா படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது என்ற தகவலை படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சமந்தா சகுந்தலம் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X