8 வருட தவம்.. 65 IVF ஊசி மூலம் 44 வயதில் கர்ப்பம்.. 3 மாதத்தில் கலைந்த கரு.. கதறி அழுத நடிகை!

சென்னை: குழந்தை வரம் வேண்டி எட்டு ஆண்டுகள் தவமாய் தவம் இருந்த பிரபல நடிகை அண்மையில் கர்ப்பமாக மகிழ்ச்சியான தகவலை அறிவித்திருந்தார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில், மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதாக கதறி அழுதபடி வீடியோவில் கூறியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் ஆறுதலை கூறி வருகின்றனர்.

44 வயது மாடல் அழகியான சம்பவ்னா சேத் போஜ்புரி மொழிப்படத்தில் பல ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி உள்ளார். மேலும் இவர், பிக் பாஸ் 2, ராஸ் பிச்லே ஜனம் கா, தில் ஜீதேகி தேசி கேர்ள், பயம் காரணி: கத்ரோன் கே கிலாடி 4 போன்ற பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மானார். இவர் 2016ம் ஆண்டு தன்னைவிட 10 வயது சிறியவரான அவினாஷ் திவேதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

sambhavna seth avinash dwivedi miscarriage


பிரபல நடிகை: சம்பவ்னா சேத் மற்றும் அவரது கணவர் அவினாஷ் திவேதி இருவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர்.அந்த சேனலையில் இருவரும் கதறி அழுதபடி ஒரு சோகமான செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில் பேசியி அவினாஷ் திவேதி, கடந்த சில மாதத்திற்கு முன்பு என் மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருந்தேன். நாங்கள் இருவரும் குழந்தையை எதிர்பார்த்து காத்து இருந்த போது எங்கள் வாழ்க்கையில் ஒரு மோசமான சம்பவம் நடந்து விட்டது. ஆமாம், என் மனைவிக்கு கரு சிதைவு ஏற்பட்டுவிட்டது.

இதயத்துடிப்பு இல்லை: பல முறை நாங்கள் IVF மூலமாக குழந்தையை பெற்றெடுப்பதற்கு முயற்சி செய்தோம். ஆனால், அவை அனைத்தும் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த முறை IVF குழந்தையை பெற்றெடுப்பதற்கு முயற்சி செய்தோம் இந்த முறை அது சாத்தியமாகி சம்பவ்னா கர்ப்பமானாள். இது அவளுக்கு மூன்றாவது மாதம். ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றோம். மூன்று மாதத்திற்கான வளர்ச்சி இருப்பதாக மருத்துவர் கூறியபோது நானும் என் மனைவியும் மகிழ்ச்சி அடைந்தோம். குழந்தைக்கு இதயத்துடிப்பு வர ஆரம்பித்து விட்டதாக கூறினார். ஆனால், அண்மையில் எடுத்த ஸ்கேனில் டாக்டர்களால் இதயத்துடிப்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்கள். இதை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை இதனால் வேறு வழியில்லாமல் கருவை கலைத்துவிட்டோம் என்று கண்கலங்கினார்.

கடவுள் கனவை கலைத்துவிட்டார்: இதைத்தொடர்ந்து பேசிய சம்பவ்னா, தாயாவதை விட ஒரு பெண்ணுக்கு சந்தோஷம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒரு சில தம்பதியினர் ஒவ்வொரு நாளும் இதற்காக வருட கணக்கில் காத்திருக்கிறார்கள். அதைப்போலத்தான் நானும் தாயாக வேண்டும் என்று 8 ஆண்டுகளாக காத்திருந்தேன். குழந்தை வேண்டும் என்பதற்காக நான் அனுபவித்த வலிகள் பல, 65 ஊசிக்கள் போட்டு 44 வயதில் தாயானதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். அடுத்த ஆண்டு என் கையில் குழந்தை இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், கடவுள் என் கனகை கலைத்துவிட்டார் என்று நடிகை கண்ணீருடன் சம்பவ்னா பேசி உள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X