மாரி 2... கேஜிஎப்... இரண்டிலும் ஒரே விஷயம்... யாரை பார்த்து யார் காப்பி அடிச்சான்னு தெரியலையே!
மாரி 2 மற்றும் கேஜிஎப் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே வசனம் இடம்பெற்றுள்ளது.
சென்னை: மாரி 2 மற்றும் கேஜிஎப் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே வசனம் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய மாரி 2 திரைப்படம் நேற்று வெளியானது. சேட்டைக்கார டானாக தனுஷ் நடித்துள்ள இப்படம் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் தனுஷ் பேசும் பஞ்ச் டயலாக்குகள் பிரபலமடைந்துள்ளன. குறிப்பாக படத்தில் தனுஷ் பேசும், 'இஃப் யு ஆர் பேட்... ஐயம் யுவர் டேட்", அதாவது "நீ கெட்டவன்னா நான் உங்கப்பன்டா" எனும் வசனம் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
இந்த வசனத்தை படத்தில் அடிதாங்கியாக நடித்த வினோத் தான் சொன்னதாக நடிகர் தனுஷ் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டு பேசினார். மேடையிலேயே வினோத்தை பாராட்டவும் செய்தார்.
இந்நிலையில் நேற்று வெளியான கன்னட டப்பிங் படமான கேஜிஎப்பிலும் இதே வசனம் இடம்பெற்றுள்ளது. வில்லனை பார்த்து யாஷ் இதே டயலாக்கை கூறுகிறார்.
இதனால் இந்த வசனத்தை உண்மையில் யார் எழுதினார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மாரி 2 டிரெய்லரை பார்த்து கேஜிஎப் படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டவர்கள், இந்த வசனத்தை புகுத்திவிட்டனரா என்ற கேள்வி எழுகிறது.
அதுவும் காலையில் மாரி 2 படத்தை பார்த்துவிட்டு, மதியம் கேஜிஎப் படத்தை பார்க்கும் போது, இரண்டிலும் ஒரே வசனம் இடம்பெற்றது வியப்பை ஏற்படுத்தியது. "கிரேட் பீப்பில் திங்க் அலைக்" என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இதை பார்க்கும் போது அதுதான் நினைவுக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











