ஜெயம் ரவி விவாகரத்துக்கும் ஊர்மிளா விவாகரத்துக்கும் இப்படியொரு தொடர்பு இருக்கா?.. என்ன நடக்குது?
மும்பை: அமீர் கான் தனது மனைவியை பிரிந்த போதும், சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிந்த போதும், தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி பிரிந்த போது கூட இருவரும் ஒரு மனதாக பிரிவை அறிவித்திருந்தனர்.
ஆனால், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியும் போது ஜெயம் ரவி மட்டுமே விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். விவாகரத்து பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றே ஆர்த்தி ரவி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெயம் ரவி செய்ததை போலவே ஊர்மிளாவும் தன்னிச்சையாக விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அவரது கணவரான மோஷின் அக்தருக்கு இதுபற்றி தெரியாது என்கின்றனர்.
8 வருடங்களாக குழந்தையே இல்லை: ரங்கீலா, இந்தியன், ஜுடாய், கோன், சத்யா, பூத் உள்லிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஊர்மிளா. 40 பிளஸ் கடந்த நிலையில், தான் திருமணம் செய்துக் கொண்டார். தன்னை விட 10 வயது இளையவரான மோஷின் அக்தரை திருமணம் செய்துக் கொண்ட நிலையிலும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை.
தாயாக வேண்டும் என்பது கட்டாயமில்லை: அனைத்து பெண்களும் தாயாக வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தால் வளர்ப்பேன். இல்லை என்றால் இல்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில் ஊர்மிளா தனக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்கிற கேள்விக்கு பதில் அளித்திருந்தார். குழந்தை பேறு இல்லாத குறைதான் தற்போது அவர் தனது கணவரை பிரியக் காரணமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதை பற்றியெல்லாம் அப்போதே அவர் கவலைப்படவில்லை என்றும் இதற்கு பின்னணியில் வேறு ஏதாவது காரணம் இருக்கும் என்கின்றனர்.
ஜெயம் ரவியை போலவே: தனது கணவர் சம்மதத்துடன் இந்த விவாகரத்து முடிவை ஊர்மிளா எடுக்கவில்லை என்றும் தன்னிச்சையாகவே அவர் எடுத்துள்ளார் என்றும் கூறுகின்றனர். ஆனால், இதுவரை ஊர்மிளா மற்றும் அவரது கணவர் மோஷின் இருவருமே விவாகரத்து அறிவிப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஊர்மிளா மட்டுமே நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குத் தொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அது பற்றியும் ஊர்மிளா இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
துரோகம் தான் காரணமா?: தன்னை விட 10 வயது குறைவான இஸ்லாமியரான மோஷின் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக கசிந்த தகவல் தான் நடிகை ஊர்மிளா இப்படியொரு அதிரடி நடவடிக்கையை எடுக்க காரணம் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. தனக்கு தனது கணவர் செய்த துரோகம் தான் அவரை பிரியும் முடிவை நடிகை எடுக்க காரணம் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











