ரஜினிக்கு பச்சை குத்தணும் - ஒரு டாட்டூ கலைஞரின் ஆசை
சமீர் பான்டேஜ்… பிரபலமான டாட்டூ கலைஞர். அதாவது சினிமாக்காரக்களுக்கென்றே ஸ்பெஷலாக உள்ளவர் இந்த சமீர். பாலிவுட்டின் அத்தனை பிரபலங்களுக்கும் டாட்டூ (அதாவது நம்ம ஊரு பச்சை குத்துதல்!) வரைவது இவர்தான்.
ஹ்ரித்திக் ரோஷன், சஞ்சய் தத், ஷாகித் கபூர், சுஷ்மிதா சென், நம்ம ஊர் த்ரிஷா என பலருக்கும் பச்சை குத்தும் பார்ட்டி இவர்.
இவருக்கு கோலிவுட்டைப் பற்றி பெரிதாக தெரியாதாம்.
சமீபத்தில் சென்னை வந்திருந்த இவர் கூறுகையில், "எனக்கு சென்னையில் உள்ள நட்சத்திரங்களில் இருவரைத்தான் தெரியும். அவர்களுக்கு டாட்டூ வரைந்துவிட விருப்பம். ஒருவர் சூர்யா… அவரிடம் அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பரிச்சயமான அவரை எப்படிச் சந்திப்பது என்றுதான் தெரியவில்லை!," என்றார் ஏக்கத்துடன்.
“ரஜினி சாருக்கு ஒரு சின்ன டாட்டூ வரைந்தாலும் போதும்… ரொம்ப திருப்தியாக இருக்கும்" என்கிறார் சமீர் பான்டேஜ்.
நியாயமான ஆசைதான். முயற்சி பண்ணுங்க, வாய்ப்பு கிடைக்கும்!
Comments


Click it and Unblock the Notifications
