'அதுல நடிச்சீங்கள்ல, இதுலயும் பண்ணுங்க..' திடீரென முளைத்த முத்தக்காட்சி.. ஆவேசமாக மறுத்த நடிகை!
சென்னை: திடீரென முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியதால் பிரபல நடிகை நடிக்க மறுத்துள்ளார்.
Recommended Video
சினிமாவில் முத்தக்காட்சி மற்றும் பிகினி உடைகளில் நடிப்பதற்கு படத்தில் ஒப்பந்தம் போடும்போதே நாயகிகளிடம் சொல்ல வேண்டும்.
சிலர் அதையும் ஒப்பந்தத்தில் சேர்த்துவிடுவது உண்டு. சில நடிகைகள், அதற்காக அதிக சம்பளமும் கேட்பார்கள்.
சரண்யா மடியில் சாய்ந்து.. ஆஹா.. ரசனைக்கார காதலரய்யா... சூப்பர்!

நடிகை சமீரா ரெட்டி
இந்நிலையில் படத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது, முத்தக்காட்சி பற்றி சொல்லாமல் திடீரென அப்படியொரு காட்சியில் நடிக்கச் சொன்னதால் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பிரபல நடிகை பகிர்ந்துள்ளார். தமிழில் வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி.

காதல் திருமணம்
இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்துக்கு பின் நடிக்காமல் இருக்கும் சமீரா, சமூக வலைத்தளங்களில் இப்போது ஆக்டிவாக இருக்கிறார்.

குழந்தை வளர்ப்பு
தனது குழந்தைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு உள்பட பல விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார். வீடியோ மற்றும் குழந்தைகளின் போட்டோக்களையும் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவை பரமபத விளையாட்டுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

இதிலும் அப்படி நடியுங்கள்
அவர் கூறும்போது, 'இந்தியில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்றார்கள். இதை முதலில் சொல்லவில்லையே என்று கேட்டேன். நீங்கள் ஏற்கனவே முஸாஃபிர் என்ற படத்தில் நடித்திருக்கிறீர்களே? அதனால் இதிலும் அப்படி நடியுங்கள் என்றார்கள். ஒரு படத்தில் அப்படி செய்தால், ஒவ்வொரு படத்திலும் செய்ய வேண்டுமா? என்று கேட்டேன்.

பாம்புகளிடம் இருந்து
தயவு செய்து இதைக் கவனமாக கையாளுங்கள், இல்லை என்றால் நீங்கள் மாற்றப்படலாம் என்றார்கள். மற்றொரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ, என்னை அணுக முடியாதவர் என்றும் போரிங் என்றும் சொன்னார். இனி, இவரோடு நடிக்கக் கூடாது என்றும் சொன்னார். சினிமா பரமபத விளையாட்டு போலதான். பாம்புகளிடம் இருந்து சுற்றி நகர்ந்து நமது பாதையை அடைய தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











