9 மாதம் கர்ப்பம்: நீருக்கு அடியில் பிகினியில் போட்டோஷூட் நடத்திய நடிகை
Recommended Video
மும்பை: 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி பிகினி அணிந்து நீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
நடிகை சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவர் அண்மையில் கோவாவுக்கு சென்றபோது பிகினி அணிந்து எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசினார்கள்.
இந்நிலையில் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுப்பது போன்று போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
சமீரா ரெட்டி
9 மாதத்தில் என் வயிற்றின் அழகை கொண்டாட விரும்பினேன். சோர்வு, பயம், மகிழ்ச்சி என்று பல உணர்ச்சிகள் பொங்கும் நேரத்தில் இதை செய்தேன் என்று கூறி நீருக்கு அடியில் பிகினியில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சமீரா ரெட்டி. கர்ப்பமாக இருந்தால் பிகினி அணியக் கூடாது என்று சட்டம் இல்லை என்று நிரூபித்துவிட்டார்.
நெட்டிசன்கள்
பிகினி புகைப்படத்தை வெளியிட்டால் நெட்டிசன்கள் தன்னை கிண்டல் செய்வார்கள், மோசமாக திட்டுவார்கள் என்று தெரிந்தும் அவர் துணிச்சலாக இப்படி செய்துள்ளார். கர்ப்பமாக இருந்தால் வீட்டோடு இருக்க வேண்டும் என்று இல்லை. நீ நடத்துமா ராசாத்தி என்று பாலிவுட் பிரபலங்கள் சமீராவை பாராட்டியுள்ளனர்.
விளாசல்
சமீரா ரெட்டி நினைத்தது போன்றே நடந்துவிட்டது. நிறைமாத கர்ப்பிணி செய்யும் வேலையா இது, அப்படி என்ன பிகினி அணிய வேண்டிய அவசியம், உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று ஒரு கூட்டம் அவரை திட்டி கமெண்ட் போட்டுள்ளது. இதை நிச்சயம் சமீரா கண்டுகொள்ள மாட்டார்.

முதல் குழந்தை
முதன்முதலாக கர்ப்பமாக இருந்தபோது பிரச்சனை ஏற்பட்டு சமீரா பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். நல்ல வேளை இரண்டாவது கர்ப்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவர் மனதுக்கு பிடித்ததை செய்து மகிழ்கிறார். என்ன அதை எல்லாம் சமூக வலைதளங்களில் தெரிவிப்பதால் அவ்வப்போது விமர்சனத்திற்குள்ளாகிறார். கர்ப்பிணி என்றும் கூட பார்க்காமல் அவரை திட்டுகிறார்கள் நெட்டிசன்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு தனது உடல் எடை வெகுவாக கூடியதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் அவர் இரண்டாம் பிரசவத்தை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்.


Click it and Unblock the Notifications