கர்ப்பிணி இப்படி பிகினி அணியலாமா?: கலாய்த்தவர்களுக்கு சமீரா ரெட்டி நெத்தியடி

By Siva

மும்பை: 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கலாய்த்துள்ளனர்.

நடிகை சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர் தனது 3 வயது மகன் மற்றும் கணவருடன் கோவாவுக்கு சென்றார். அங்கு கடற்கரையோரம் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சமீரா.

Sameera Reddy gives befitting reply to haters

அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் அவரின் அழகை பாராட்டியிருந்தார்கள். மேலும் சிலரோ மேடம், உங்க கணவர் ரொம்ப ஹாட் என்று தெரிவித்தனர். இன்னும் சிலரோ கர்ப்பணியாக இருந்து கொண்டு இப்படி உடை அணிய வெட்கமாக இல்லையா, இப்படியா வயிற்றை காட்டுவது என்று கேட்டிருந்தனர்.

நெட்டிசன்கள் தன்னை விளாசுவதை பார்த்த சமீரா ரெட்டி அவர்களுக்கு திருப்பி கொடுக்க முடிவு செய்தார். இதையடுத்து மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீரா தன் வயிறை பெருமையாக காட்டுவதை பார்த்து திட்டியவர்களுக்காகவே இப்படி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். ஒரு கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை திட்டுவது தவறு என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீரா கர்ப்ப காலத்தில் என்ன உடை அணிய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. அவர் அணியும் உடையால் அவரின் கணவருக்கே பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும்போது நெட்டிசன்கள் சமீரா ரெட்டியை கிண்டல் செய்வதும், கடுமையாக விமர்சிப்பதும் தவறு.

முதல் பிரசவத்திற்கு பிறகு சமீரா தான் 100 கிலோவுக்கு மேல் இருந்ததாக தெரிவித்தார். அதையும் நினைவூட்டி சமீராவை கிண்டல் செய்துள்ளனர் நெட்டிசன்கள். பிரசவம் நெருங்கும் நேரத்தில் சமீராவுக்கு இந்த நெட்டிசன்களால் தேவையில்லாத மனஉளைச்சல்.

முதல் முறை கர்ப்பமாக இருந்தபோது சில பிரச்சனை ஏற்பட்டு மாதக் கணக்கில் படுத்த படுக்கையாக இருந்தார் சமீரா. நல்ல வேளையாக இந்த முறை அப்படி எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அதனால் அவர் தனது கணவர், மகனுடன் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். அவரவர் வாழ்க்கையை அவரவர் விருப்பப்படி வாழ விடலாமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X