பிரசவம் ஆன கையோடு குழந்தையின் போட்டோவை வெளியிட்ட சமீரா ரெட்டி
மும்பை: நடிகை சமீரா ரெட்டி தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த நடிகை சமீரா ரெட்டி மும்பையில் உள்ள பீம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று காலை பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்நிலையில் சமீரா தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, மகள் பிறந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
புகைப்படத்தில் குழந்தையின் கைவிரல்கள் மட்டும் தான் உள்ளது. பிரபலங்கள் தங்களுக்கு குழந்தை பிறந்தால் இப்படித் தான் புகைப்படம் வெளியிடுகிறார்கள். இந்நிலையில் சமீராவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு கூட சமீரா தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்கு முந்தைய நாள் மேக்கப் இல்லாமல் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
முதல் முறை கர்ப்பமானபோது பிரச்சனை ஏற்பட்டு மாதக் கணக்கில் படுத்த படுக்கையானதால் இம்முறை தனது ஆசையை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டுள்ளார். முதல் பிரசவத்தால் படாதபாடு பட்ட போதிலும் விரும்பியே இரண்டாவது முறை கர்ப்பமானதாக சமீரா தெரிவித்தார்.
இம்முறை பிரசவத்திற்கு பிறகு தான் வெயிட் போட்டாலும் கவலைப்படப் போவது இல்லை என்றும், யார் தன்னை பார்த்து விமர்சித்தாலும், அதிர்ச்சி அடைந்தாலும் கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அவர். சமீராவுக்கு மீண்டும் நடிக்க வரும் ஆசை உள்ளது. ஆனால் மகள் கொஞ்சம் வளர்ந்த பிறகே நடிப்பை தொடர்வாராம்.
சமீராவுக்கு 4 வயதில் ஹன்ஸ் என்கிற மகன் உள்ளார். சமீரா அக்ஷய் வர்தே என்கிற தொழில் அதிபரை கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











