பட்ட கஷ்டத்தை மறந்துட்டியான்னு கேட்ட கணவர்: அப்படித் தான் செய்வேன்னு அடம்பிடித்த நடிகை
மும்பை: முதல் கர்ப்பம் பிரச்சனையாகி கஷ்டப்பட்ட பிறகும் இரண்டாவது முறை கர்ப்பமானது ஏன் என்று சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை சமீரா ரெட்டி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தாயும், சேயும் நலமாக இருப்பதாக சமீராவின் அம்மா தெரிவித்துள்ளார்.

பிரச்சனை
சமீரா முதல் முறை கர்ப்பமானபோது பிரச்சனையாகி மாதக் கணக்கில் படுத்த படுக்கையாக இருந்தார். பிரசவத்திற்கு பிறகு ஓவராக வெயிட் போட்டு 102 கிலோவானார். அவரை பார்த்தவர்கள் சமீராவா இது என்று அதிர்ச்சி அடைந்தனர். அத்தனை கஷ்டத்திற்கு பிறகும் இரண்டாவது குழந்தை தேவைதானா என்று பலரும் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தார்.

கணவர்
ஆமாம், கடந்த முறை பட்ட கஷ்டத்தையும் தாண்டி மீண்டும் கர்ப்பமாக விரும்பினேன். வெப் சீரீஸில் நடிக்க கடந்த மே மாதம் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரீஸில் நடிக்கட்டுமா என்று என் கணவர் அக்ஷயிடம் கேட்டேன். ஆனால் நான் மீண்டும் தாயாக விரும்புவதாக அவரிடம் கூறினேன். முதல் குழந்தைக்கு பட்ட கஷ்டத்தை எல்லாம் மறந்துவிட்டாயா என்று கணவர் கேட்டார் என சமீரா தெரிவித்தார்.

நடிப்பு
மீண்டும் கர்ப்பமாக வேண்டும் என்பது என் முடிவு. நான் மீண்டும் நடிக்க செல்ல விரும்பவில்லை, தாயாக விரும்புகிறேன் என்று கணவரிடம் தெரிவித்தேன். இம்முறை எதுவும் என்னை பாதிக்காதபடி பார்த்துக் கொள்வேன். யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசட்டும். அது பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்றார் சமீரா ரெட்டி.

போட்டோஷூட்
இரண்டாவது முறை கர்ப்பமானபோது பிகினி அணிந்து நீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார் சமீரா. பிரசவத்திற்கு பிறகு வெயிட் போட்டாலும் அதை குறைத்து பழைய சமீராவாக மாறுவேன் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சமீராவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல் குழந்தை பிறந்த பிறகு மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தினமும் அழுததாகவும் சமீரா ரெட்டி கூறினார்.


Click it and Unblock the Notifications











