கருப்பாக இருப்பதாகச் சொல்லி சினிமாவில் நிராகரித்தார்கள்.. வருத்தப்படவில்லை.. பிரபல நடிகை புகார்

By

சென்னை: கருப்பாகவும் உயரமாகவும் இருப்பதாகச் சொல்லி சினிமாவில் நிராகரித்தார்கள் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Asin Daughter Cutest Video | Celebrity Kids, Prakash Raj, Alya Manasa, Allu Arjun

தமிழில் வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி.

இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தொழிலதிபர் அக்‌ஷய் வர்தே என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்துக்கு பின் நடிக்காமல் இருக்கும் சமீரா, சமூக வலைத்தளங்களில் இப்போது ஆக்டிவாக இருக்கிறார். தனது குழந்தைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு உள்பட பல விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார். வீடியோ மற்றும் குழந்தைகளின் போட்டோக்களையும் பதிவு செய்கிறார்.

சந்தோஷம் வேண்டும்

சந்தோஷம் வேண்டும்

சில நேரம் பெண்களுக்கு அட்வைஸும் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தோற்றத்தில் எப்படி இருந்தாலும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை நாமே விரும்ப வேண்டும். மற்றவர்கள் தோற்றத்தோடு நம்மை ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. இருப்பதை வைத்து சந்தோஷப்பட வேண்டும். சினிமாவில் கூட மற்ற நடிகைகளோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள் என்று கூறி இருந்தார்.

பக்கத்து வீட்டுப்பெண்

பக்கத்து வீட்டுப்பெண்

இந்நிலையில், தன்னைக் கருப்பாகவும் உயரமாகவும் இருப்பதாகச் சொல்லி சினிமாவில் நிராகரித்தார்கள் என்று இப்போது கூறியுள்ளார். இதுபற்றி நடிகை சமீரா கூறியிருப்பதாவது: பாலிவுட்டில் எனது ஆரம்ப காலத்தில், என்னை மிகவும் கருப்பாக இருப்பதாகச் சொன்னார்கள். உயரமாகவும் குண்டாகவும் இருப்பதாகவும் சொன்னார்கள். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்துக்கு சரியாக இருக்க மாட்டேன் என்றும் கூறினார்கள்.

வருத்தப்படவில்லை

வருத்தப்படவில்லை

இது உண்மையில் என்னை சோர்வடைய செய்தது. ஆனால் வருத்தப்படவில்லை. ஏனென்றால் நிபந்தனையின்றி என்னை நேசிக்கும் இந்த நிலைக்கு வர அதுதான் கற்றுக்கொடுத்தது. உங்களை வெறுக்கும் நிலையை கடந்து செல்லவேண்டும். நீங்கள் யாரையாவது சந்திக்கும்போது, 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உடல் எடையை நன்றாகக் குறைத்துவிட்டீர்கள் என்று சொல்கிறீர்கள்.

தவறான விஷயங்கள்

தவறான விஷயங்கள்

இது மகிழ்ச்சியானதுதான். ஆனால் என் பிரச்னை என்னவென்றால், சமூகமாக பாரட்ட வேண்டும். மக்கள் எப்போதும் தவறான விஷயங்களையே பாராட்டுகிறார்கள். அதனால் நாம் சமூகமாக மாற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். நடிகை சமீரா இந்தியில், மெய்னே தில் துஜ்கோ தியா, முஸாபிர், ரேஸ், ஒன் டு தீர், தே தனா தன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X