தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகர்.. மனைவி 5 மாத கர்ப்பம்.. பரிதாப நிலை!

பெங்களூர் : தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகரின் மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

கன்னட சீரியல் நடிகரான சம்பத் ஜெயராம் சனிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளம் நடிகரின் மறைவு கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sampath Jayarams wife was five months pregnant

சம்பத் ஜெயராம் : சின்னத்திரை நடிகரான சம்பத் ஜெயராம் அக்னிசாக்ஷி என்ற கன்னட சீரியலில் நடித்து பிரபலம் ஆனார். இந்த சீரியலில், வைஷ்ணவி கவுடாவின் தம்பியாக சம்பத் ஜெயராம் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்லபெயரைப் பெற்றுத்தந்தது. இவர் கடைசியாக ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

Sampath Jayarams wife was five months pregnant

சீரியல் நடிகர் தற்கொலை : சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு கடந்த சில நாட்களாக படவாய்ப்பு சரியாக அமையாததால் பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்து வந்தார். இவர்,நெலமங்கலத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின், சம்பத்தின் சொந்த ஊரான ஹூத்துரா என்.ஆர்.பூருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றது இதில் சீரியல் நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பட வாய்ப்பு இல்லை : சம்பத் ஜெயராம் தற்கொலை குறித்து பல விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், அவரது நண்பர், ராஜேஷ் துருவா தற்கொலைக்கான காரணத்தை கூறியுள்ளார். அதில், சம்பத் பல இடங்களில் வாய்ப்பு தேடிவந்தார், நல்ல நடிப்பு திறமை இருந்தும் படங்கள் சரியாக அமையாததால், இந்த விபரீதமான முடிவை எடுத்துவிட்டார்.

Sampath Jayarams wife was five months pregnant

5 மாத கர்ப்பம் : அவருக்கு திருமணம் ஆகி ஓராண்டு கூட ஆகவில்லை, அவரது மனைவி சைதன்யா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இருவரும் பல வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காதல் மனைவியை இப்படி நிர்கதியாக்கிவிட்டு சென்று விட்டான் என்று அவரது நண்பர் கண்ணீர் மல்க கதறி அழுதார். இந்த சின்ன வயதில் சம்பத் ஜெயராம் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது கன்னட திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X