மோசமானவங்க.. இவங்கக்கூட சேராதீங்க.. ரசிகரின் கோரிக்கைக்கு அனிதா சம்பத் சொன்ன பதில பாருங்க!

சென்னை: அன்பு கேங்குடன் சேர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த ரசிகருக்கு அனிதா சம்பத் பதில் அளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிந்து இரண்டு வாரங்கள் ஆகப் போகிறது. ஆனால் மக்கள் மத்தியில் இன்னும் பிக்பஸ் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் பேசு பொருளாய்தான் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தங்களின் சுய ரூபத்தை காட்டிய ஹவுஸ்மேட்டுகளை விளாசி வருகின்றனர். இதில் அதிகம் டேமேஜ் ஆனது அர்ச்சனா, ரம்யா பாண்டியன், பாலாஜி ஆகியோர் தான்.

அர்ச்சனா கேங்

அர்ச்சனா கேங்


இவர்கள் மூன்று பேருமே பின்னால் பேசுவது, பிரித்தாளுவது, மற்றவர்களை மட்டப்படுத்துவது என இருந்து வந்தனர். இதனால் இவர்களை விளாசித் தள்ளினர் நெட்டிசன்கள். அன்பு தான் ஜெயிக்கும் என அர்ச்சனா தனக்கென ஒரு கேங்கை உருவாக்கிக் கொண்டு செய்த சேட்டைகளை ரசிர்கள் இன்னும் மறக்கவில்லை.

கழுவி ஊற்றப்பட்டனர்

கழுவி ஊற்றப்பட்டனர்

அதேபோல் சம்யுக்தா, ரம்யா பாண்டியன், பாலாஜி, ரியோ ஆகியோரும் ஆரி உட்பட தனித்துவமாக விளையாடிய அனிதா சம்பத் மற்றும் சனம் ஷெட்டியுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுப்பான ரசிகர்கள் அவர்களை சமூக வலைதளங்களில் கண்ட மேனிக்கு கழுவி ஊற்றினர்.

சண்டையை மறந்த ரசிகர்கள்

சண்டையை மறந்த ரசிகர்கள்

அனிதா சம்பத்தும் ஆரியுடன் மல்லுக்கு நின்றார். ஆனால் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். மேலும் அனிதா சம்பத் ஆரி தான் ஜெயிக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறினார். இதனால் ரசிகர்கள் அனிதா ஆரியிடம் சண்டை போட்டதை மறந்து விட்டனர்.

இவங்கக்கூட சேராதீங்க..

இவங்கக்கூட சேராதீங்க..

இந்நிலையில் அனிதா சம்பத், அர்ச்சனா, சம்யுக்தா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோருடன் சேர்ந்து எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்கள் எல்லாம் ரொம்ப மோசமானவங்க, இந்த டீம் கூட சேராதீங்க என்று கூறி வருகின்றனர்.

எல்லாரும் நல்லவங்கதான்

எல்லாரும் நல்லவங்கதான்

இதனை பார்த்த அனிதா சம்பத் அதற்கு பதில் அளித்தார். அதவாது எல்லாரும் நல்லவங்கதான் ப்ரோ.. கேம்லாம் முடிஞ்சு போச்சு என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பல முறை பிக்பாஸ் வீட்டின் சூழ்நிலைதான் போட்டியாளர்களை கோபப்பட வைத்தது. யாரும் வேண்டும் என்றே கோபப்படவில்லை என்று கூறியிருந்தார் அனிதா சம்பத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X