இந்த நிலை மாறும்.. ஸ்னீக்பீக்.. சிங்கிள் டேக்கில் நடிப்பவர்களுக்கு ரூ 5000 பரிசு!

சென்னை : இந்த நிலை மாறும் படத்தில், நடிகர் சாம்ஸ் அதிகமான காட்சிகளில் சிங்கிள் டேக்கில் நடித்திருப்பதாகவும், இதே போல , அந்த காட்சியை ஒரே டேக்கில் நடித்து காட்டுபவர்களுக்கு ரூ. 5000 பரிசு தொகை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சாம்ஸ் சுவாமிநாதன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் தான் இந்த நிலை மாறும். இந்த படத்தில் அஸ்வின் குமார், நிவேதிதா சதீஷ் மற்றும் சாம்ஸ் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை அருண்காந்த்.வி இயக்கி இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு இசையையும் அவரே அமைத்து இருக்கிறார்.

 Sams announces Rs 5,000 prize for Single Tag performers

தற்போது இந்த படம் வெளியாக போகும் நிலையில் படத்தின் விளம்பரத்திற்காக படத்தின் ஸ்நீக் பீக் வெளியிடபட்டிருக்கிறது. இதனுடன் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து உள்ள சாம்ஸ் படத்தின் காட்சி ஒன்று தற்போது வருகிறது. அந்த காட்சியை எந்த டகால்டி வேலையும் செய்யாமல் ஒரே டேக்கில் நடித்து வீடியோவாக பதிவேற்றுபவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு தொகை காத்திருக்கிறது என அறிவித்தார் .

இந்த படத்தில் சாம்ஸ் அதிகமான காட்சிகளில் சிங்கில் டேக்கில் நடித்திருப்பதாகவும், இதே போல நீங்களும் இந்த ஸ்நீக் பீக் காட்சியை ஒரே டேக்கில் நடித்து காட்டுங்கள் மார்ச் 3 வரை கால அவகாசம் உள்ளது என கூறியுள்ளார் .

 Sams announces Rs 5,000 prize for Single Tag performers

மேலும் படத்தின் இந்த நிலை மாறும் பெயரை ஐஎன்எம் என்ற ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தி ஹாஸ்டேக்குடன் வீடியோவை பதிவேற்றுமாறு சாம்ஸ் இந்த ஸ்நீக் பீக்கின் போது கேட்டு கொண்டார். நடிகர் சாம்ஸ் பல படங்களில் சிறிய காட்சிகளில் நடித்து இருக்கிறார். சட்டென்று இவர் ஞாபகத்திற்கு வருவது அறை எண்305ல் கடவுள் படத்தில் நடித்த கதாபாத்திரம் தான் .

இந்த நிலை மாறும் படத்தில் சில்லு கருபட்டி படத்தில் நடித்த நிவேதிதா சதீஷ் நடித்துள்ளார். இவர் சில்லுகருப்பட்டி படத்தின் மூலம் ரசிகர்களால் பாராட்டப்பட்ட நாயகி. இவர் இதற்கு முன்பே ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் தெலுங்கில் ஹலோ என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.

 Sams announces Rs 5,000 prize for Single Tag performers

இந்த நிலை மாறும் படம் மார்ச் 6 வெளியாகுகிறது. படத்தில் ராம் குமார் சுதர்சன், அஸ்வின் குமார், சாம்ஸ், ஒய்.ஜி.மஹேந்திரன்,டி.எம்.கார்த்திக், வினோத் வர்மா, லஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X