என்னாது.. "ஏ" சர்ட்டிபிகேட் படத்தில் நடிக்கப்போறேனா?.. சாம்ஸ் புது விளக்கம்

சென்னை : இருட்டு அறையில் முரட்டுக்குத்துப்படத்தில் சாம்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, "யு" சர்ட்டிபிகேட் படத்தில் நடித்து பிரபலமாவதை விட "ஏ" சர்ட்டிபிகேட் படங்களில் நடித்து பிரபலமாகி கொள்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் உண்டு அதிலும் கிரேஸி மோகனின் காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. அவரின் வசனங்கள் மற்றும் நடிப்பும் மிகவும் அற்புதமாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியவர் தான் சாம்ஸ்.

Sams plays the iruttu araiyil murattu kuthu part-2

கிரேஸி மோகனின் மேடை நாடகங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டியிருந்தவர். பின் திரைதுறையில் காதல் மன்னன் படத்தில் மூலம் அறிமுகமானார்.

இவர் ரஜினி, விஐய் மற்றும் பலருடன் இணைந்து நடித்துள்ளார். இவரை மக்களிடையே எடுத்துசென்ற படம் 'அறை என் 305 ல் கடவுள்' இதில் ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் நடித்து இருப்பார். அந்த படத்தில் இவர், பைக் வாங்கிட்டேன்,கார் வாங்கிட்டேன் கடைசியா ஹெலிக்காப்டர் வாங்கிட்டேன் என்று வரும் காட்சி உண்மையிலேயே ரசிக்கும் படியாகவும், சிரிக்கும் படியாகவும் இருந்த இந்த படத்தின் மூலம் இவர் பிரபலமானார். அடுத்தாக இவர் நடித்த படம் தான் 'பயணம்' இந்த படத்திலும் இவரின் காமெடி நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

Sams plays the iruttu araiyil murattu kuthu part-2
தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது சக்கைபோடு போட்டது. இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மட்டும் ஏகபோக வரவேற்பு பெற்றது. இப்படம் முழுக்க இரட்டை அர்த்த வசனம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டாம் பாகத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை பற்றி சாம்ஸிடம் கேட்டப்போது, நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறீர்கள் தற்போது ஏன் இப்படி பட்ட படம் என்று கேட்டதற்கு, நான் "யு" சர்ட்டிபிகேட் படத்தில் நடித்து பிரபலமாவதை விட "ஏ" சர்ட்டிபிகேட் படங்களில் நடித்து பிரபலமாகி கொள்கிறேன் என்று கூலாக பதில் அளித்தார் சாம்ஸ். இவரு சொல்றத பார்த்த முதல் பாகம் விட, இரண்டாம் பாகத்திலும் டபில் மீனிங் காமெடி அதிகமா இருக்கும் போல தெரியுதே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X