சுஷாந்த் பண்ணை வீட்டில் போதை விருந்து.. ரியாதான் ஏற்பாடு செய்தார்.. உண்மையை கக்கிய வேலைக்காரர்கள்!
மும்பை: சுஷாந்தின் பண்ணை வீட்டில் போதை மருந்துகளுடன் அடிக்கடி ட்ரக் பார்ட்டி நடந்ததாக அவரது வேலைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐ வசம் சென்றதில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி, சுஷாந்துக்கு தெரியாமலேயே போதைப் பொருட்களை கொடுத்ததும் தெரியவந்தது.
ரியாவின் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.

கைது
இதனை தொடர்ந்து ரியா சக்ரவர்த்தியின் வீட்டில் போதை பொருள் தடுப்புப்பிரிவினர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ரியாவின் சகோதரர் ஷோவிக் மற்றும் சுஷாந்த் சிங் மேலாளர் சாமுவேல் மிராண்டா, சுஷாந்த் வீட்டு வேலைக்காரர் தீபேஷ் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ட்ரக் பார்ட்டி
இந்நிலையில் சாமுவேல் மிராண்டாவும் தீபேஷ் சாவந்தும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பண்ணை வீட்டில் நடைபெற்ற ட்ரக் பார்ட்டி குறித்த தகவல்களை மிராண்டா மற்றும் தீபேஷ் வழங்கியுள்ளனர்.

பின்னணியில் ரியா
இந்த விருந்துகளில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள், பார்ட்டிக்கு போதைப்பொருட்களை கொண்டு வந்தவர்கள் உள்ளிட்ட நபர்களின் பெயரையும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் விசாரணையின் போது சாமுவேல் மிராண்டா மற்றும் தீபேஷ் சாவந்த் ஆகியோர் சுஷாந்தின் வீட்டிற்கு சட்டவிரோதமான மருந்துகளை வாங்கியதன் பின்னணியில் ரியா சக்ரவர்த்தி இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஒரு பாக்கெட் 2500
2019ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் வரை சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு கஞ்சா ஏற்பாடு செய்ததாக சாமுவேல் மிராண்டா ஒப்புக்கொண்டார். ஷோவிக் சக்ரவர்த்தியின் நண்பர் சூர்யதீப்பிடமிருந்து ஒரு பாக்கெட் கஞ்சா ரூ .2,500க்கு வாங்கியதாகவும் கூறினார்.

வீட்டிற்கே டெலிவரி
மற்றொரு போதை மருந்து சப்ளையரான கமல்ஜீத் பெயரையும் கூறினார். ரியாவின் குடியிருப்பு உள்ள வாட்டர்ஸ்டோன் கிளப், பிரைம் ரோஸ் அபார்ட்மென்ட் மற்றும் சுஷாந்தின் மவுண்ட் பிளாங்க் அபார்ட்மென்ட் ஆகியவற்றுக்கு கர்மஜீத் கஞ்சா வழங்கியதாகவுத் அவர் கூறினார்.

சம்மன்
செப்டம்பர் 9ஆம் தேதி வரை ஷோவிக் சக்ரவர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோருக்கு என்சிபி கஸ்டடி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை, என்.சி.பி குழு ரியா சக்ரவர்த்திக்கும் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











