பிக்பாஸ் ஜூலிக்கு சமுத்திரக்கனி அட்வைஸ்!
சென்னை : சமுத்திரக்கனி நல்ல நடிகர் என்பதைத் தாண்டி நல்ல மனிதரும் கூட. அவர் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கத் தெரிந்தவர். அந்த வகையில் சமீபத்தில் அப்படி ஒரு விஷயத்தைச் செய்துள்ளார் சமுத்திரக்கனி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜுலி அங்கு தனது நடவடிக்கைகளால் பலரால் விமர்சனத்துக்கு உள்ளானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஜூலி எங்கு திரும்பினாலும் ரசிகர்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர். அவரும் விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார்.

பிக்பாஸ் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சிக்கு நடிகர் சமுத்திரக்கனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரக்கனி, 'ஜுலி... தயவுசெய்து சில நாட்கள் ஏதும் பேசாமல் இருந்துவிடு, மக்களே உன்னை மன்னித்துவிடுவார்கள்' என்று ஜூலியானாவுக்கு அட்வைஸ் செய்தார்.


Click it and Unblock the Notifications











