ஹேப்பி பர்த்டே சமுத்திரக்கனி...பஞ்சதந்திரம் ஃபஸ்ட்லுக் வெளியிட்டு வாழ்த்திய படக்குழு

ஐதராபாத் : நடிகர் சமுத்திரக்கனி, பஞ்சதந்திரம் என பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு படம் ஒன்றில் ராமநாதம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரம்மானந்தம், ஸ்வாதி ரெட்டி, ஷிவாத்மிகா ராஜசேகர், ராகுல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமுத்திரக்கனி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். சமுத்திரக்கனியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பஞ்சதந்திரம் படத்தை தயாரிக்கும் டிக்கெட் ஃபேக்டரி மற்றும் எஸ் ஒரிஜினல்ஸ் நிறுவனங்கள் சமுத்திரக்கனியின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டனர்.

Samuthirakani as Ramanatham in Panchathantram: First Look released on birthday

இந்த படத்தை ஹர்ஷா புலிபகா எழுதி, இயக்கி வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி நடிப்பது பற்றி தயாரிப்பாளர்கள் அகிலேஷ் வர்தன் மற்றும் ஸ்ருஜன் யாரபோலு கூறுகையில், சமுத்திரக்கனிக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்து. இப்படி ஒரு நல்ல மனிதர், சிறந்த நடிகர் எங்களின் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவரது திறமையை புதிய கோணத்தில் காட்டுவதாக பஞ்சதந்திரம் படம் அமையும். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் 10 நாட்களில் புரொடக்ஷன் வேலைகள் முடிந்து விடும். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஏற்கனவே துவங்கி விட்டன என்றனர்.

டைரக்டர் ஹர்ஷா புலிகா கூறுகையில், இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஓய்வுபெற்ற பேங்க் மேனேஜராக நடிக்கிறார். கிராக் படத்தில் இந்த ஆண்டு அவரின் சூப்பரான நடிப்பை பார்த்திருப்போம். எங்கள் படத்தில் தனித்துவமான கேரக்டரில் சமுத்தரக்கனியை பார்க்க போகிறீர்கள். 60 வயது முதியவர் கேரக்டரில் நடித்துள்ள சமுத்திரக்கனியை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் அப்பாவை பார்ப்பது போன்ற எண்ணம் வரும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X