தனுஷுக்கு சமுத்திரகனியால் வந்த புதிய சிக்கல்?

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக ரிலீஸ் பிரச்சனையில் தவித்து வந்த எனை நோக்கி பாயும் தோட்டா, ஒருவழியாக வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகிறது.

சங்கத்தமிழன், ஆக்‌ஷன் படங்களுடன் போட்டியிட விரும்பாமல், நவம்பர் 15ம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டாவை ரிலீஸ் செய்யாமல், எந்த போட்டியும் இல்லாத நவம்பர் 29ம் தேதியை தேர்வு செய்த படக்குழுவுக்கு, தற்போது சமுத்திரகனியால் புதிய சிக்கல் முளைத்துள்ளது.

தந்தை டு வில்லன்

தந்தை டு வில்லன்

தனுஷின் வேலையில்லா பட்டதாரி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் தனுஷுக்கு தந்தையாக சமுத்திரகனி நடித்திருந்தார். பின்னர், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் தனுஷுக்கு வில்லனாக சமுத்திரகனி புதிய அவதாரம் எடுத்தார். தற்போதும், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டாவுக்கு சமுத்திரகனி வில்லனாகியுள்ளார்.

தெலுங்கில் பிஸி

தெலுங்கில் பிஸி

தமிழில் தொடர்ந்து குணசித்திர நடிகராக நடித்து வந்த சமுத்திரகனி, தெலுங்கில் தற்போது பிஸியான நடிகராகி உள்ளார். தெலுங்கு திரையுலகின் ஜாம்பவான் இயக்குநர்களான ராஜமெளலி, த்ரிவிக்ரம் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து வரும் சமுத்திரகனி, ரவிதேஜாவின் 66வது படத்திலும் இணைந்துள்ளார்.

அடுத்த சாட்டை

அடுத்த சாட்டை

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி, அதுல்யா ரவி, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள அடுத்த சாட்டை படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாட்டை படம் சமுத்திரகனிக்கு மாபெரும் வெற்றியை தந்த நிலையில், அடுத்த சாட்டை படமும் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன சிக்கல்

சமுத்திரகனிக்கும் தனுஷுக்கும் என்னதான்யா சிக்கல் என கேட்கிறீர்களா, சமுத்திரகனி நடிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த சாட்டை படமும் வரும் நவம்பர் 29ம் தேதி உருவாகிறது. முதன்முறையாக தனுஷுடன் நேருக்கு நேர் சமுத்திரகனி படம் மோதவுள்ளதால், சோலோ ரிலீசாக வெளியாகலாம் என நினைத்த எனை நோக்கி பாயும் தோட்டாவிற்கு சிக்கல் உருவாகியுள்ளது. யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X