‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக டிவிட்டரில் சமுத்திரக்கனி வேதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டிவீட் செய்துள்ள இயக்குனர் சமுத்திரக்கனி, 'எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..' என தமிழக அரசை சாடியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்ரெட்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இந்த சம்பவத்துக்கு இயக்குனர் சமுத்திரக்கனியும் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவர், 'எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..' என கடுமையாக சாடியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசின் நடவடிக்கையை அவர் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











