கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சமுத்திரக்கனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

சென்னை : நடிகர் சமுத்திரக்கனி தனது 47வது பிறந்தநாளை அந்தகன் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

இதில், பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியில் வெற்றி

இந்தியில் வெற்றி

2018ம் ஆண்டுவெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் அந்தாதூன். இந்த திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார்.ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

தமிழ் ரீமேக்

தமிழ் ரீமேக்

3 தேசிய விருதுகளையும் வென்ற இந்த திரைப்படம் தற்போது தமிழில அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே.ஜே.பிரட்ரிக் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார் பிரியா ஆனந்த் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில்

முக்கியமான கதாபாத்திரத்தில்

அந்தாதூன் படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக பேசப்பட்டதால் தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் முக்கியமான ஒருவரை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். இதனால், நடிப்பு, நடனம் என அனைத்து வகையிலும் ஆட்கொண்ட சிம்ரன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இந்த படத்தின் மூலம் நிச்சயமாக சிம்ரனுக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கேக் வெட்டி கொண்டாட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம்

நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் ஒருமுக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமுத்திரக்கனி தனது 47வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அந்தகன் படப்பிடிப்பு தளத்தில் சமுத்திரக்கனியின் பிறந்தநாளை நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், தியாகராஜன் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X