உனக்கு ஒரு வாய்.. எனக்கு ஒரு வாய்...சமுத்திரக்கனிக்கு கேக் ஊட்டும் பிரியா ஆனந்த்... வைரல் வீடியோ!
சென்னை : நடிகர் சமுத்திரக்கனி தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
அந்தகன் படப்பிடிப்புத்தளத்தில் கேக் வெட்டி இவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டத்தின் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

இயக்குனராக
2003ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கிய முதல் படத்திற்கே சிறந்த கதை வசனத்திற்கான மாநில விருதை இப்படம் பெற்றது. இதையடுத்து நாடோடி,போராளி, நிமிர்ந்து நில், அப்பா ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

தனுஷின் அப்பாவாக
இவர் இயக்குனராக மட்டும் இல்லாம் ஈசன், சாட்டை, நீர்பறவை,வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தந்தையாக நடித்து அசத்தி இருப்பார்.மேலும் தேசிய விருது பெற்ற விசாரணை படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

லீட் ரோலில்
தற்போது இவர், இந்தியில் வெற்றிப்பெற்ற அந்தாதூன் ரீமேக் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்தகன் என பெயரிப்பட்டுள்ள அந்த படத்தை ஜே.ஜே பிரட்ரிக் இயக்கி வருகிறார். மேலும் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

கேக் ஊட்டிய பிரியா ஆனந்த்
இதன்படப்பிடிப்பு விறுவிறுப்பான நடைபெற்று வரும் நிலையில்,நேற்று சமுத்திரக்கனியின் 47வது பிறந்த நாள் படப்பிடிப்புத்தளத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதில்,பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் ஆகியோர் பாட்டுப்பாடி கேக் வெட்டினர். பிரியா ஆனந்த், சமுத்திரக்கனிக்கு வாழ்த்துக்கூறி கேக்கை ஊட்டி விட்டார். பின்னர் பிரசாந்த், சிம்ரன், பிரசாந்தின் அப்பா தியாகராஜன் , படக்குழுவினர் ஆகியோர் மாறிமாறி அவருக்கு வாழ்த்துக்கூறி கேக் ஊட்டினர். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோவைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











