ராஜமவுலியின் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தில் நடிக்க.. சமுத்திரக்கனிக்கு இத்தனை கோடி சம்பளமா?

By

சென்னை: ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்க, சமுத்திரக்கனிக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் பற்றி பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம்.

பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அக்‌ஷய்குமார்

அக்‌ஷய்குமார்

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது என்று கூறப்படுகிறது. சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார். இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்புகள்

படப்பிடிப்புகள்

ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர். பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட், முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். கீரவாணி இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தொடங்கவில்லை

தொடங்கவில்லை

இந்நிலையில், சில மாநிலங்களில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசும் ஷூட்டிங்கிற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் தெலுங்கு படங்களின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விரைவில் தொடங்க இருந்தது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஷூட்டிங்கை தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.

முக்கிய கேரக்டர்

முக்கிய கேரக்டர்

இதற்கிடையே இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் சமுத்திரகனிக்கு சம்பளமாக, ரூ.2 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மெகா பட்ஜெட் படம் என்பதாலும் அவருக்கு முக்கியமான கேரக்டர் என்பதாலும் இத்தனை கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை படக்குழுவோ, சமுத்திரகனியோ உறுதிப்படுத்தவில்லை.

அலா வைகுந்தபுரம்லோ

அலா வைகுந்தபுரம்லோ

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, தமிழ்த் தவிர மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான அல்லு அர்ஜூனின் அலா வைகுந்தபுரம்லோ என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார். ரவிதேஜாவின் கிராக் படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X