Don't Miss!
- Finance
தங்கம் ஆர்வலர்கள் பெரும் ஷாக்.. இறக்குமதி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்
- Automobiles
இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம்!
- News
"முதலிரவு".. பெண்ணை கடித்து குதறிய மாப்பிள்ளை.. "திருநங்கையா"?.. முரட்டுத்தனமான வக்கிர நபர் கைது
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சமுத்திரகனி அந்த சீன்ல பயங்கரமா நடித்துக் காட்டிட்டார்... டான் இயக்குனர் சி பி சக்கரவர்த்தி புகழாரம்!
சென்னை : டாக்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான்
முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது
சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்து கடைசியில் அழவைத்த சமுத்திரக்கனி அந்த சீனில் பயங்கரமா நடித்து காட்டி விட்டார் என இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் புகழ்ந்துள்ளார்.
ஜீ
தமிழின்
சூப்பர்
குயின்
ஷோ...
யாரு
டைட்டிலை
வின்
பண்ணியிருக்காங்க
பாருங்க!

சிவகார்த்திகேயன் நடிப்பில்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் குறிப்பாக சிவகார்த்திகேயனின் திரைப்படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் மிகச் சிறந்த படங்களாக இருக்கும் அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

டான்
இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபிசக்கரவர்த்தி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க பிரியங்கா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார் டாக்டர் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் இந்த படத்தில் ஜோடியாக நடிப்பதால் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தனர்

பாசிட்டிவான விமர்சனங்களை
முழுக்க முழுக்க கல்லூரி கதைக்களத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் பாலசரவணன், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி என பலர் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர். கலகலப்பான கல்லூரி கதைக்களத்தில் வெளியான இப்படம் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குனர் சிபி சக்கரவர்த்தி முதல் படத்திலேயே வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சமுத்திரக்கனியின் நடிப்பு பற்றி பேசியுள்ளார்.

சமுத்திரக்கனியின் நடிப்பு
டான் படத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தை பார்க்கும்போது பலரும் தங்களது அப்பாவை பார்த்ததாக கூறி வருகின்றனர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் உருக வைத்துள்ளது அந்த அளவுக்கு சிபி சக்கரவர்த்தி சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தை மிக அட்டகாசமாக வடிவமைத்து இருப்பார். இந்த இந்நிலையில் வேறு வழியில்லாமல் முதல் நாள் சூட்டிங்கிலேயே சமுத்திரக்கனிக்கு சென்டிமென்ட்டான சீன் வைக்கப்பட்டதாம் அதில் சமுத்திரக்கனி பயங்கரமாக நடித்துக் காட்டினார் என சிபி சக்கரவர்த்தி ஒரு நேர்காணலில் சமுத்திரக்கனியை புகழ்ந்துள்ளார்.