அப்பா 2 படத்தை இயக்க இயக்குநர் சமுத்திரகனி திட்டம்
சென்னை : இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி.
Recommended Video
அவரது இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள படம் விநோதய சித்தம். ஓடிடியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
அவரது இயக்கத்தில் அப்பா படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அப்பா 2 படத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இயக்குநர் சமுத்திரக்கனி
நடிகராகவும் இயக்குநராகவும் கோலிவுட்டில் வலம் வருபவர் சமுத்திரகனி. வில்லன் ரோலாக இருந்தாலும் கேரக்டர் ரோலாக இருந்தாலும் கூப்பிடு சமுத்திரக்கனியை என்ற அளவில் அவர் கோலிவுட்டில் உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்துள்ள உடன்பிறப்பே படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

விநோதய சித்தம்
இதேபோல இவரது இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம் விநோதய சித்தம். படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அப்பா 2 படம்
இந்நிலையில் அப்பா 2 படத்தை இயக்க சமுத்திரக்கனி முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2016ல் வெளியான படம் அப்பா. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாகவும் இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெற்றது.

வரவேற்பை பெற்ற அப்பா படம்
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத் தந்தது. தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்களை, அலைகழிப்பை முன்வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கி, தயாரித்து நடித்திருந்தார் சமுத்திரக்கனி.

இரண்டாவது பாகம்
இந்நிலையில் அப்பா படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க சமுத்திரக்கனி திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு அப்பா 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. மேலும் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வும் துரிதமாக நடைபெறவுள்ளது.

சிறப்பான மெசேஜ்
பிள்ளைகளின் எதிர்காலம் அவர்கள் படிக்கும் பள்ளியில் இல்லை. பெற்றோரின் கையில்தான் உள்ளது என்ற மெசேஜுடன் வெளிவந்த அப்பா படம், படத்தில் அப்பா கேரக்டரில் நடித்திருந்த சமுத்திரக்கனி, இப்படி ஒரு அப்பா நமக்கில்லையே என்ற ஏக்கத்தை படம் வெளிவந்தபோது மாணவர்களிடையே ஏற்படுத்தினார்.

சிறப்பான அப்பா
மகனின் சரியான திறமையை கண்டுபிடித்து அவனை கின்னஸ் சாதனை புரியும் அளவில் வீரனாக்குவது வரை படத்தில் தான் ஏற்ற கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார் சமுத்திரக்கனி. படத்தில் தனியார் பள்ளிகளை கேள்விக்குட்படுத்தும் வசனங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றவை.


Click it and Unblock the Notifications











