நானி என் தம்பி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியமைத்திருக்கிறார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் உருகிய நடிகர்!

சென்னை: ஷியாம் சிங்கா ராய் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சமுத்திரக்கனி, நடிகர் நானியை புகழ்ந்து பேசியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் "ஷியாம் சிங்கா ராய்".

Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார்.

மூன்று ஹீரோயின்கள்

மூன்று ஹீரோயின்கள்

மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள "ஷியாம் சிங்கா ராய்" படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

டிரெய்லர் வெளியீடு

டிரெய்லர் வெளியீடு

இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா, நடைபெற்றது. இதில் நடிகர்கள் நானி, சமுத்திரகனி, சாய் பல்லவி, தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி உட்பட படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய நடிகர் சமுத்திரகனி, நடிகர் நானியை புகழ்ந்து பேசினார்.

நானி என் தம்பி

நானி என் தம்பி

அவர் பேசியதாவது, நானி என் தம்பி, ஒரு தமிழ் படத்தோடு அவர் வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு உதவி இயக்குனராக இருந்து படிப்படியாக உயர்ந்து, ஒரு சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார். அவர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நிமிர்ந்து நில் தெலுங்கு பதிப்பு நானி தான் செய்தார், 90 நாள் அவருடைய கடும் உழைப்பை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

Recommended Video

எனக்கே இந்த படம் பிரமிப்பை தருகிறது | Director Samutirakani | Vinodhaya Sitham | Filmibeat Tamil
எனக்கு மகள் போல்..

எனக்கு மகள் போல்..

ஒரு நல்ல விஷயம் கிடைத்தால் கடுமையாக உழைப்பவர் அவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும். சாய் பல்லவியின் தங்கையுடன் சமீபத்தில் தந்தையாக ஒரு படத்தி நடித்தேன் அவரும் எனக்கு மகள் போல தான். மிகச்சிறப்பான நடிகையாக வளர்ந்து வருகிறார் அவருக்கு வாழ்த்துக்கள். படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள். இவ்வாறு நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X