விஜய் பதவியேற்பு விழாவில் மூன்று பேர் மிஸ்ஸிங்.. குடும்பம் முக்கியம் தலைவா.. சமுத்திரக்கனி ஆதங்கம்
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். பெரும்பான்மைக்கு தேவையான அளவில் தொகுதிகளை வெல்ல வில்லை என்றாலும் திமுக அல்லாத திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளனர். இப்படி இருக்கையில் இவரது பதவியேற்பு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி இது தொடர்பாக ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
அதாவது அவர் பேசுகையில், " தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் பலருக்குமே அதிர்ச்சி. நேற்று கூட நாங்கள் மதுரையில் பேசிக் கொண்டு இருக்கையில் 150 கோடிகள் செலவு செய்தது குறித்து பேசினோம், ரூபாய் 150 கோடிகள் எதற்காக செலவு செய்தார்கள், ரூபாய் 1500 கோடிகள் எடுப்பதற்கு தானே? ஒரு கட்சி எல்லாம் காணவில்லை , சல்லடை ஆகிவிட்டது.

மூன்று பேர்: அதன் பின்னர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. நானும் அதை தொலைக்காட்சியில் பார்த்தேன். முதல் வரிசையில் ஒரு மூன்று பேர் மிஸ்ஸிங், அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் வீட்டிற்கே சென்று, அவர்களுடன் கை குலுக்கி, அவர்கள் தோள் மீது கை போட்டு, அன்பு செலுத்திய பண்பாளர் நீங்கள். அதனால், அந்த மூன்று பேரை விட்டு விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கிறது, தலைவா, விட்டுடாதீங்க.
குடும்பம்: ஏனென்றால் பல கோடி இளைஞர்கள் உங்கள் பின்னால் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் குடும்பம் தான் மிகவும் முக்கியமானது என்றும், மனைவி மீதும் பெற்ற பிள்ளைகள் மீதும் ஒரு பிடிப்பும் அவர்கள் தான் முக்கியம் என்ற எண்ணமும் வர வேண்டும், அதை நீங்கள் உருவாக்க வேண்டும்" என்று பேசினார். சமுத்திரக்கனி தனது பேச்சில் குறிப்பிட்டது முதலமைச்சர் விஜய்யின் மனைவி, மகன் மற்றும் மகள் குறித்து தான் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

த்ரிஷா: ஏற்கனவே பதவியேற்பு விழாவின் போது நடிகையும் முதலமைச்சர் விஜய்யின் தோழியுமான த்ரிஷா கலந்து கொண்டிருந்தார். மேலும் அவருக்கு பதவியேற்பு விழாவின் போது முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications