ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு சமுத்திரகனி இந்த உறவா?.. அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே
சென்னை: மாரி படத்தில் நடிகராக அறிமுகமான ரோபோ சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இதுவரை காமெடி ரோல் மட்டுமே ஏற்றுவரும் அவருக்குள் ஒரு சிறந்த குணசித்திர நடிகரும் இருக்கிறார் என்று ரசிகர்களில் ஒரு தரப்பினர் சொல்வதுண்டு. அவரது மகள் இந்திரஜாவும் நடிகையாகத்தான் வலம் வருகிறார். பீஸ்ட்டில் அறிமுகமான அவர்; தற்போது கூரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கும் சமுத்திரகனிக்கும் இடையே இருக்கும் உறவு முறை ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சின்னத்திரைகளில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரை தனுஷ்தான் மாரி படத்தில் நடிகராக அறிமுகமாக்கினார். முதல் படத்திலேயே சங்கருக்கு நிறைய சீன்கள் வரும்படி பார்த்துக்கொண்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரோபோ தனது நடிப்பால் தனுஷ் உட்பட ரசிகர்களையும் கவர்ந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு சங்கரின் நடிப்பை பாராட்டி அவருக்கு தங்க செயினையும் பரிசளித்தார் தனுஷ்.

வரிசையான வாய்ப்புகள்: மாரி படத்துக்கு பிறகு ரோபோ சங்கருக்கு வரிசையாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய திறமையை நிரூபித்ததன் காரணமாக கோலிவுட்டில் இப்போது குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பை பார்க்கும் ரசிகர்கள் காமெடி ஆக்டராக மட்டுமின்றி குணசித்திர வேடங்களிலும் சங்கர் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்திரஜா சங்கர்: இதற்கிடையே அவருக்கு இந்திரஜா என்கிற மகள் இருக்கிறார். அவரை இயக்குநர் அட்லீ தான் இயக்கிய பீஸ்ட் படத்தில் நடிகையாக அறிமுகம் செய்தார். தனது தந்தை போலவே முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் பலரையும் கவர்ந்தார். அதனையடுத்து கொம்பன் படத்தில் நடித்த அவர் கடைசியாக கூரன் படத்தில் நடித்தார். கடந்த வருடம் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்ட இந்திரஜாவுக்கு சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது.
சங்கரின் பேச்சு: இந்நிலையில் தனது மகள் இந்திரஜா மற்றும் சமுத்திரகனிக்கு இடையே இருக்கும் உறவு குறித்து ரோபோ சங்கர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. திரு. மாணிக்கம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், "சமுத்திரகனி எனக்கு உடன் பிறவாத சகோதரர். எனது மகள் இந்திரஜா அவரது ஃபோனில் சமுத்திரகனியின் பெயரை பெரியப்பா என்றுதான் சேமித்து வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு கனி எனது குடும்பத்துக்கு முக்கியமானவர்.
என் பேரனை பார்க்கவில்லை: ஆனால் இப்போதுவரை அவர் எனது பேரனை வந்து பார்க்கவே இல்லை. விரைவில் அது நடக்கும் என்று நம்புகிறேன். நானும் சமுத்திரகனியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இதுதொடர்பாக அவரிடம் நான் பலமுறை சொல்லியுள்ளேன். அதுவும் ஒரு நாள் கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











