சமுத்திரக்கனியின் வெள்ளை யானை ஓடிடி ரிலீஸ்
சென்னை : திருடா திருடி படத்தை இயக்கிய டைரக்டர் சுப்ரமணியம் சிவா, வெள்ளை யானை படத்தின் மூலம் மீண்டும் படம் இயக்க வந்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யவே திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தை முன்னணி தமிழ் டிவி சேனல் ஒன்றில் நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.
அதன் பிறகு ஓடிடி.,யில் இந்த படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த ஆத்மியா, சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, எஸ்எஸ் ஸ்டான்லி, ராமதாஸ், பாவா செல்லத்துரை, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
விவசாயத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை மற்றும் வசனங்கள் விவசாயிகளின் பிரச்சனையை சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மினி ஸ்டூடியோஸ் பேனரில் எஸ்.வினோத் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆர்.ஜெகதீசன் மேற்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











