சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்‘ ... புது அப்டேட் என்ன?
சென்னை : பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ரைட்டர் திரைப்படம் குறித்த மாஸான அப்பேட் வெளியாகி உள்ளது.
Recommended Video
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பா ரஞ்சித்
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். சமீபத்தில் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். இதில் இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார் ரஞ்சித். குத்துசண்டையை மையமாக வைத்து உருவான இப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இதில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

பாராட்டை பெற்றது
குத்துச்சண்டையை மையமாக வைத்தும், 1975ம் ஆண்டு அவசர நிலை பிரகடனத்தின் போது தி.மு.கவுக்கு நேர்ந்த நிகழ்வுகள் குறித்தும் பல காட்சிகளில் காட்டப்பட்டிருந்தது. இந்த படத்திற்காக ஆர்யா மிகவும் கடினமாக உடற்பயிற்சி செய்து பாக்சர் போல வைத்திருந்தார்.அனைத்து தரப்பு மக்களும் இந்த படத்தை பாராட்டினார்கள்.

தயாரிப்பாளராக
பா.ரஞ்சித் இயக்குனராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர், தயாரித்த பரியேறும் பெருமாள், திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

ரைட்டர்
சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தி நடிக்கும் ரைட்டர் திரைப்படத்தை பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை ப்ராங்க்ளின் ஜோசப் இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளராக ப்ரதீப் காளிராஜா, எடிட்டராக மணிகண்டன் சிவகுமார் ஆகியோர் பணிபுரிகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

யு/ஏ சான்றிதழ்
இந்நிலையில், டைட்டர் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடித்த தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு டஜன் படங்கள்
நடிகர் சமுத்திரக்கனி, இடிமுழக்கம்,உடன்பிறப்பே, நான் கடவுள் இல்லை, ஆனந்தம் விளையாடும் வீடு, காத்து வாக்குல ரெண்டு காதல், எம்.ஜி.ஆர்.மகன், அந்தகன், பீட்சா3, பல்லு படாம பாத்துக்க, கோப்ரா என ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிசியாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











