தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தயாரான ”ரைட்டர்”... சமுத்திரகனி வேற லெவல்

சென்னை: பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் "ரைட்டர்" படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்

இப்படத்திற்கு "96" பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.

வலியை அழுத்தமாக

வலியை அழுத்தமாக

சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி. காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது.

நாளுக்கு நாள்

நாளுக்கு நாள்

'போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு'... 'காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை' உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக "ரைட்டர்" இருக்கும் என்று தோன்றுகிறது. பலரின் எதிர்பார்ப்பையும் நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது "ரைட்டர்". ரைட்டரின் தாக்கம் தமிழ் சினிமாவில் பெரும் வலியை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எல்லா தரப்பிலும்

எல்லா தரப்பிலும்

கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த ஆண்டு சமுத்திரகனிக்கு மிக சிறந்த ஆண்டாக அமைந்து உள்ளது . தான் நடித்த படங்கள், இயக்கிய படங்கள் என்று எல்லா தரப்பிலும் வெற்றி மீது வெற்று வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது .

Recommended Video

Sudha Kongara கண் கலங்கிட்டாங்க | Writer Shan Karuppasamy Exclusive | Filmibeat Tamil
காக்கி வண்ணம் ஏற்படுத்தும்

காக்கி வண்ணம் ஏற்படுத்தும்

சமீப காலமாக காவல்துறை சம்மந்தப்பட்ட படங்கள் அறிய படாத பல விஷயங்களை திரை வடிவமாக கொண்டு வந்து சேர்த்துவதில் சினிமாத்துறை பல வித்யாசமான இயக்குனர்கள் மூலம் பல் வேறு திரைக்கதைகள் மூலம் மிரட்டி வருகிறார்கள். சமீபத்தில் வைத்த ஜெய்பீம், காவல்துறை உங்கள் நண்பன் போன்ற படங்கள் அதற்க்கு சிறந்த உதாரணம். இன்னமும் நிறைய படங்கள் காக்கி சட்டை பற்றியும் அதன் பின்னால் இருக்கும் நல்லவைகள் மற்றும் அந்த காக்கி வண்ணம் ஏற்படுத்தும் பாதிப்புகளை சொல்ல வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X