காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்..எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரைட்டர்..வெளியானது மிரட்டல் புரமோ!

சென்னை: பா.ரஞ்சித்தின் நீலம் புரடெக்ஷன் தயாரிக்கும் ரைட்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமனார்.

இதனை தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தையும் தயாரித்தார் பா ரஞ்சித். இந்தப் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

5 படங்கள்

5 படங்கள்

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பாக தன்னிடம் உதவி இயக்குநர்களாக இருந்த மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகியோர்கள் 5 படங்களை இயக்குவதாக அறிவித்தார்.

ரைட்டர் படம்

ரைட்டர் படம்

இந்த 5 படங்களையும் நீலம் புரடொக்ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த 5 இயக்குநர்களின் படங்களில் முதலாவதாக பிராங்க்ளின் ஜேக்கப்பின் 'ரைட்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

படத்தின் ட்ரெயிலர் வெளியீடு

படத்தின் ட்ரெயிலர் வெளியீடு


இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். '96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது.

ரைட்டராக சமுத்திரக்கனி

ரைட்டராக சமுத்திரக்கனி

இதன்மூலம் படத்தின் கதை காவல் நிலையத்தை மையப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. காவல் நிலையத்தில் அதிக அனுபவம் வாய்ந்த ரைட்டராகவும் மேலதிகாரிகளால் அவமதிக்கப்படும் ஒரு ஊழியராகவும் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இந்த ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

Sudha Kongara கண் கலங்கிட்டாங்க | Writer Shan Karuppasamy Exclusive | Filmibeat Tamil
ரைட்டர் போஸ்டர்கள்

ரைட்டர் போஸ்டர்கள்

இதனிடையே படத்தின் பல்வேறு போஸ்டர்களை நடிகர் சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் பா. ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் தங்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். பேனாவில் இருந்து ரத்தம் சொட்டுவது போலவும் கம்பி வேலி பென்சிலை பிடித்து எழுதுவது போன்றும் கைவிலங்கிட்டிருப்பது போன்றும் போஸ்டர்கள் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X