சமுத்திரகனி - சசிகுமார்... நாடோடிகள் 2 ஆரம்பம்!

By Shankar

Recommended Video

சமுத்திரகனி - சசிகுமார்... நாடோடிகள் 2

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று நல்ல வசூலும் செய்தது. அந்த படத்தின் வெற்றி, நாடோடிகள் என்ற பெயரில் தனி நிறுவனத்தையே தொடங்க வைத்தது சமுத்திரகனியை.

மீண்டும் சமுத்திரகனி - சசிகுமார் கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு நாடோடிகள் 2 என்று தலைப்பிட்டுள்ளனர்.

Samuthirakani, Sasikumar join again for Nadodigal 2

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் - ஜாக்கி, படத்தொகுப்பு - ஏஎல் ரமேஷ்.

தமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழுவினர், நாடோடிகள் படத்தை போன்றே நாடோடிகள் 2 படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி சிறந்த விருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X