அந்த பெரிய ஹீரோ வேண்டுமென்றே காலால் எட்டி உதைத்தார்.. சசிகுமார் செய்த வேலை.. சமுத்திரகனி உருக்கம்!
சென்னை: நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமைய்யா நடிப்பில் உருவாகியுள்ள திரு. மாணிக்கம் திரைப்படம் அடுத்த வாரம் டிசம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நேற்று நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரகனி சினிமாவில் தான் கடந்து வந்த அவமானங்களையும் சந்தித்த நல்ல நண்பர்களையும் பற்றி உருக்கமாக பேசினார்.
பெரிய ஹீரோ ஒருவர் வேண்டுமென்றே தன்னை காட்சி ஒன்றில் கரம் வைத்து எட்டி உதைத்ததாகவும் ஓபனாக கூறியுள்ளார். மேலும், சசிகுமார் தனக்கு பதிலாக சப்ஸ்டிட்யூட்டாக ஒருவரை வைத்து இருந்தது குறித்தும் அந்த மேடையில் பளிச்சென கூறியுள்ளார்.

கோலிவுட்டை விட ஆந்திராவில் ரொம்பவே பிசியாக இருந்து வரும் சமுத்திரகனி தமிழிலும் அடிக்கடி படங்களில் நடித்து வருகிறார். திரு. மாணிக்கம் படத்தில் நேர்மையான குடும்பஸ்த்தனாக அவர் நடித்துள்ள நிலையில், புரமோஷன் நிகழ்ச்சியில் தனது மனதில் உறுத்திக் கொண்டிருந்த விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.
எட்டி உதைத்த ஹீரோ: ஒல்லி நடிகர் ஒருவர் என்னை சினிமாவில் இருந்து ஒதுக்கி விட வேண்டும் என்று நினைத்தார். ஒரு படத்தில் ஒரு காட்சியில் என்னை பிரபல ஹீரோவை வைத்து எட்டி உதைக்கும் காட்சியில் ஓங்கி ஒரே மிதி மிதித்து விடுங்கள், அவர் சினிமாவை விட்டே ஓடிவிட வேண்டும் என்றார். அந்த ஷாட்டில் அந்த ஹீரோ எட்டி உதைக்க நான் எகிறி போய் எங்கேயோ விழுந்தேன். எல்லாரும் சிரித்தனர். ஆனால், நான் வைராக்கியமாக எப்படியாவது இங்கே நல்ல நடிகனாக மாறிவிட முடியும் என்று நம்பினேன். அதன் பின்னர் என்னை எட்டி உதைத்த ஹீரோவும், என்னை எட்டி உதைக்க சொன்ன நடிகரும் நண்பர்களாக மாறி மன்னிப்பும் கேட்டார்கள் என திரு. மாணிக்கம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சமுத்திரகனி உருக்கமாக பேசியுள்ளார்.
சசிகுமார் பார்த்த வேலை: சுப்ரமணியபுரம் படத்தில் பணியாற்ற போகும் போது, சசிகுமார் என்ன நினைத்தான்னு தெரியல 2 படம் பண்ணியிருக்காரு, 2000 எபிசோடு எடுத்திருக்காரு, வேற ஏதாவது பண்ணிடுவாரோன்னு நினைச்சு எனக்கு பதில் இன்னொரு சப்ஸ்டிட்யூட்டை என் பக்கத்து ரூமிலே வச்சிருக்கான். நான் நேரடியா போனேன் என்னடா என்னை நடிக்கவே கூப்பிடலன்னு கேட்டேன். 2 நாள் ரெஸ்ட் எடு, அப்புறம் பண்ணுவோம்னு சொன்னான். அதன் பின்னர் ஒரே ஒரு சீன் மட்டும் நடிக்க வச்சான். இன்னைக்கு அவ்வளவுதான் நீங்க கிளம்புங்கன்னு சொன்னான். ஷூட்டிங் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிரவுட் எல்லாம் க்ளியர் பண்ண ஆரம்பித்தேன். அப்போது அழைத்து, அண்ணா நான் நடிக்கிறேன், நீங்க படம் எடுங்கன்னு சொன்னான். அப்படி தான் ஆரம்பித்தது எங்களுக்குள்ளான நட்பு. அதன் பின்னர், இந்த சப்ஸ்டிட்யூட் மேட்டரையும் சொன்னான். அவனிடம் இருந்த உண்மை தான் இன்றளவும் எங்களை நண்பர்களாக வைத்திருக்கிறது என்றார். மேலும், அமீர் தனக்கு செய்த உதவிகளையும் அடுக்கி பேசினார்.
நந்தா பெரியசாமி ஜெயிக்கணும்: நான் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போயிருந்தேன். கதை எல்லாம் நல்லா இருக்குப்பா.. ஆனால், காலையில் தான் ஒருத்தருக்கு படம் ஓகே பண்ணிட்டேன்னு சொன்னார். யாருடா அந்த டைரக்டர் என பார்த்தால் நந்தா பெரியசாமி. அவரை தேடி பிடித்துப் போய் பேசியதில் அவருடைய நட்பு கிடைத்தது. என்னை விட நல்ல மனிதன் அவன் சினிமாவில் பெரிதாக வெற்றிப் பெறவேண்டும் என சமுத்திரகனி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











