சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெற வேண்டுமா? சமுத்திரகனி கூறும் அட்வைஸ கேளுங்க!

By staff

சென்னை: நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்டவர் தான் சமுத்திரக்கனி.
ஆரம்ப காலத்தில் சினிமாவில் துணை நடிகராக வந்த இவர், அதன் பின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
சமுத்திரகனி இயக்கத்தில் முதல் வெற்றி படமாக அமைந்தது, சசிகுமார் நடித்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற நாடோடிகள் திரைப்படம் தான்.

Samuthirakani shares his opinion on small Budget films and theatres which getting it.

இதனை தெலுங்கிலும் ரீமேக் செய்தார் சமுத்திரக்கனி. சசிகுமாரை வைத்து தனது படங்களை இயக்கி வந்த சமுத்திரக்கனி. தன் படங்களை தமிழில் எடுத்து வெற்றி பெற்றதும் அதனை தெலுங்கில் எடுத்து அங்கேயும் வெற்றி பெற்றார். இவரின் நிமிர்ந்து நில் படம் ஊழல்கள் நிறைந்த அதிகாரிகளை கேள்வி கேட்கும் ஒர் இளைஞனின் கதை. படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமூகத்தில் மேல் உள்ள அவலங்கள் மற்றும் கோவத்தின் வெளிப்பாட்டை தன் படங்களில் பிரதிபலிக்கிறார். மற்றும் இவர் எடுத்த அப்பா திரைப்படம் அனைத்து தமிழ் நெஞ்சங்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளது. விவசாயிகளுக்காக இவர் எடுத்த தொண்டன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் படம் மட்டுமல்ல பல சின்னத்திரை தொடர்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samuthirakani shares his opinion on small Budget films and theatres which getting it.

தற்போது ஒரு பேட்டியில் சிறு பட்ஜெட் படங்களுக்கு அதிகம் தியேட்டர் கிடைப்பதில்லையே அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு. அப்படியெல்லாம் இல்லை என் படம் சுப்பிரமணியபுரம் ரிலீஸ் ஆகிறது. எனக்கு பலரும் சிறு தியேட்டர்களையே வழங்கினர் பின் திங்கட்கிழமை வருகிறது. எல்லா விதமான பெரிய திரையரங்குகளிலும் என் படம் ஓடியது.

படம் நன்றாக இருந்தால் போதும் மக்கள் ஒத்துக் கொள்ளவார்கள். மற்றும் தியேட்டர்கள் கூடும். தியேட்டர்களுக்கு வரும் மக்கள் கதை உள்ளதா என்று தான் பார்பார்கள். அதனால் சிறிய பட்ஜெட் படங்கள் கதைகளில் சற்று கவனம் செலுத்தி உழைத்தால் வெற்றி நிச்சயம் என சமுத்திரகனி கூறியுள்ளார்.

Samuthirakani shares his opinion on small Budget films and theatres which getting it.

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் சமீபத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி படமும் மிகுந்த பாராட்டுக்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X